Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டெல்லிக்கு ஹாட்ரிக் தோல்வி.. ஆரஞ்சு கேப் வென்று என்ன பிரயோஜனம்.. இதுலாம் நியாமா டேவிட் வார்னர்!

கவுகாத்தி: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளாது. ராஜஸ்தான் அணி தரப்பில் போல்ட் மற்றும் சாஹல் 3 விக்கெட்டுகளையும், அஸ்வின் இரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

16வது சீசனுக்கு 11வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியை எதிர்த்து டெல்லி அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் டேவிட் வார்னர் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி இளம் வீரர் ஜெய்ஸ்வால் மற்றும் பட்லர் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 199 ரன்கள் குவித்தது. கவுகாத்தி மைதானத்தில் 200 ரன்கள் இலக்கு எட்டக் கூடியது என்பதால், ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Rajasthan Royals sets a target of 200 Runs for Delhi Capitals in IPL 2023

இதனைத் தொடர்ந்து டெல்லி அணி சார்பாக இம்பேக்ட் பிளேயராக கலீல் அஹ்மத்திற்கு பதிலாக இளம் வீரர் பிரித்வி ஷா களமிறங்கினர். வழக்கம் போல் பிரித்வி ஷா - டேவிட் வார்னர் கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கியது. அதேபோல் வழக்கம் போல் பிரித்வி ஷா டக் அவுட்டாகி வெளியேறினார். இவரைத் தொடர்ந்து மனீஷ் பாண்டே அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார். இதனால் தொடக்கமே டெல்லி அணிக்கு சோதனையாக அமைந்தது.

பின்னர் வந்த ரைலி ரூஸோ 14 ரன்களில் ஆட்டமிழக்க, டெல்லி அணி 36 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. அதேபோல் டெல்லி அணி பவர் பிளே ஓவர்கள் முடிவில் 38 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்பின்னர் டேவிட் வார்னர் ஒருபக்கம் நங்கூரமிட்டு ஒருநாள் கிரிக்கெட்டை ஆட்டத்தை ஆட, மறுபக்கம் நின்றிருந்த லலித் யாதவ் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசினார். இதனால் டெல்லி அணியின் ஸ்கோர் உயர்ந்த நிலையில், லலித் யாதவும் 38 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

Rajasthan Royals sets a target of 200 Runs for Delhi Capitals in IPL 2023

பின்னர் டேவிட் வார்னர் அரைசதம் விளாச, தொடர்ந்து வந்த அக்சர் படேல் மற்றும் ரோவ்மன் பவல் தலா 2 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தனர். இதனால் டெல்லி அணி 16 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்தது. இதன்பின்னர் டெல்லி அணியின் வெற்றிக்கு கடைசி 18 பந்துகளில் 71 ரன்கள் அடிக்க வேண்டிய நிலை வந்தது. ஆனால் அடுத்தடுத்த ஓவர்களில் கேப்டன் டேவிட் வார்னர் 65 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்தது. இதனால் ராஜஸ்தான் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளாது. ராஜஸ்தான் அணி தரப்பில் போல்ட் மற்றும் சாஹல் 3 விக்கெட்டுகளையும், அஸ்வின் இரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

Story first published: Saturday, April 8, 2023, 17:27 [IST]
Other articles published on Apr 8, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+