Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2021: உலகின் நம்பர்.1 டி20 பவுலர்.. வளைத்துப் போட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் - எடுபடுமா?

அமீரகம்: உலகின் நம்பர்.1 டி20 பவுலரை ஆஸ்திரேலிய வீரருக்கு பதில் ரீபிளேஸ் செய்திருக்கிறது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

ஐபிஎல் தொடரின் 2ம் பாதி ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பர் 19ம் தேதி முதல் அக்டோபர் 15ம் தேதி வரை நடைபெறுகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் தொடர், கொரோனா பெருந்தொற்று காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது.

சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ்

ஐபிஎல் தொடரில் இதுவரை 29 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், மீதமுள்ள 31 போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. சமீபத்தில் ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி மொத்தம் உள்ள 31 போட்டிகள் 27 நாட்களில் நடத்தி முடிக்கப்பட உள்ளது. இந்தத் தொடரின் முதல் பாதியில் நடைபெற்ற முதல் லீக் போட்டியில் மும்பை அணியிடம் சென்னை அணி தோல்வியை தழுவியிருந்தது. இந்நிலையில், தொடரின் 2ம் பாதி தொடங்கவுள்ள நிலையில் இதற்கான பயிற்சிகளை மேற்கொள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் என இரண்டு அணிகளுமே அணியுமே தங்களது வீரர்களை பயோ பபுள் பாதுகாப்புடன் அமீரகம் அனுப்பி உள்ளன. அங்கு கடந்த 13-ம் தேதி முதல் குவாரண்டைனில் இருந்த வீரர்களுக்கு நடந்த கொரோனா பரிசோதனையில் அனைவருக்கும் நெகட்டிவ் என்று முடிவு வந்தது ஆறுதல் தரும் செய்தியாக அமைந்தது.

சென்னை vs மும்பை

சென்னை vs மும்பை

இதற்கிடையே, எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் என அனைவருமே கடந்த ஆக.20ம் தேதி முதல் தங்களது முதல்கட்ட பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். துபாயில் உள்ள ஐசிசி அகாடமியில் இந்த பயிற்சி முகாம் தொடங்கியது நடைபெற்று வருகிறது. அதேபோல், ஐ.பி.எல். கிரிக்கெட் தொடருக்கான முதல் பயிற்சியை மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் தொடங்கியுள்ளனர். அந்த அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து தொடர் முடிந்தவுடன் அவர் மும்பை அணியுடன் இணைந்து கொள்வார்.

அக்.15ம் தேதி

அக்.15ம் தேதி

ஐபிஎல் இறுதிப் போட்டிகள் அக்டோபர் 15ல் நடைபெறும். இரண்டு ஆட்டங்கள் நடைபெறும் நாளில் முதல் போட்டி மாலை பிற்பகல் 3:30 மணிக்கும், இரண்டாவது போட்டி இரவு 7:30 மணிக்கும் தொடங்கும். 31 போட்டிகளில் பெரும்பாலானவை துபாயில் (13), ஷார்ஜா (10) மற்றும் அபுதாபி (8) ஆகிய இடங்களில் நடைபெறும். லீக் கட்டத்தின் இறுதிப் போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேபிடல்ஸ் இடையே அக்டோபர் 8 ஆம் தேதி நடைபெறும். இத்தொடரில், அக்டோபர் 10 அன்று குவாலிஃபையர் 1 போட்டி துபாயிலும், எலிமினேட்டர் மற்றும் குவாலிபையர் 2 ஷார்ஜாவில் முறையே அக்.11 மற்றும் அக்.13ல் தொடங்கும்.

ஆண்ட்ரூவ் டை விலகல்

ஆண்ட்ரூவ் டை விலகல்

கடந்த 2020ம் ஆண்டு சீசனில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ், பிளே ஆஃப் சுற்றுக்கு கூட தகுதிப் பெறாமல் முதன் முறையாக தொடரில் இருந்து வெளியேறியது. ஆனால், இந்த சீசனில் இந்தியாவில் நடைபெற்ற போட்டிகளில் அட்டகாசமாக விளையாடியது. அதே ஃபார்மை அமீரகத்திலும் சென்னை அணி தொடர வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும். இதற்கிடையில், ஒவ்வொரு அணியிலும் சில வீரர்கள் சில குறிப்பிட்ட காரணங்களுக்காக கலந்து கொள்ளாமல் தொடரில் இருந்து வெளியேறி உள்ளனர். அந்த வகையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து ஆஸ்திரேலிய பவுலர் ஆண்ட்ரூவ் டை விலகியுள்ளார். தனது குடும்பத்தினருடன் நேரம் செலவிட இருப்பதால், தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

டப்ரைஸ் ஷம்சி

டப்ரைஸ் ஷம்சி

இதனால், அவருக்கு பதில் தென்னாப்பிரிக்காவின் இடது கை ஸ்பின்னரான டப்ரைஸ் ஷம்சியை ராஜஸ்தான் அணி ரீபிளேஸ் செய்துள்ளது. இவர் உலகின் நம்பர்.1 டி20 பவுலர் என்பது கூடுதல் தகவல். 39 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஷம்சி, 45 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ஆவரேஜ் 6.80. இந்த குறைவான ஆவரேஜுக்கு தான் இவருக்கு மதிப்பு. டி20 போன்ற போட்டிகளில் இவ்வளவு குறைவான பவுலிங் ஆவரேஜ் வைத்திருப்பது என்பது பெரிய விஷயம். அதிலும் ஒரு ஸ்பின்னராக இதை வைத்திருப்பது என்பது செம. ஐபிஎல் தொடரில், இதற்கு முன் 2016ம் ஆண்டு சீசனில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக ஷம்சி விளையாடியுள்ளார். 4 போட்டிகளில் களமிறங்கிய ஷம்சி 3 விக்கெட்டுகளை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, August 26, 2021, 14:11 [IST]
Other articles published on Aug 26, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+