Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இங்கேயும் கொஞ்சம் திரும்பி பாருங்க.. ராஜஸ்தான் - டெல்லி மோதல்.. இன்றாவது ரன் அடிப்பாரா பிரித்வி ஷா?

கவுகாத்தி: ஐபிஎல் தொடரின் 11வது லீக் போட்டியில் வலிமை வாய்ந்த ராஜஸ்தான் அணியை எதிர்த்து முதல் வெற்றிக்காக போராடி வரும் டெல்லி அணி விளையாட உள்ளது. பஞ்சாப் அணியுடன் அடைந்த தோல்வியால் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் ராஜஸ்தானும், அடுத்தடுத்து இரு தோல்விகளை அடைந்ததால் முதல் வெற்றியை பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் டெல்லி அணியும் இருப்பதால், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

16வது சீசனுக்கான ஐபிஎல் தொடரில் இன்று ராஜஸ்தான் - டெல்லி அணிகளுக்கு இடையிலான இன்னொரு போட்டியும் நடக்கிறது. சென்னை - மும்பை அணிகளுக்கு இடையிலான இரவு நடப்பதால், மாலை நடக்கும் போட்டி மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு குறைவாகவே உள்ளது. ஆனால் ஐபிஎல் தொடரில் குறைந்த எதிர்பார்ப்பை கொண்ட போட்டிகளே, மறைக்க முடியாத பல அனுபவங்களை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளது.

Rajasthan Royals to Play against Delhi Capitals at Guwahati Stadium in IPL 2023

இந்த நிலையில் அசாம் மாநிலம் கவுகாத்தியில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த பின், இம்முறை ராஜஸ்தான் அணி டெல்லி அணியை எதிர்கொள்கிறது. ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் அபார வெற்றியை பெற்ற ராஜஸ்தான் அணி, பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தது. இருப்பினும் வெற்றிக்கான போராட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு சிறந்த போட்டி கொடுத்து உற்சாகப்படுத்தியது. தற்போது மீண்டும் அதே மைதானத்தில் ஆட்டம் நடப்பதால், ராஜஸ்தான் அணி வெற்றிக்காக போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னொரு பக்கம் டெல்லி அணியை பொறுத்தவரையில் குஜராத் மற்றும் லக்னோ ஆகிய அணிகளிடம் மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. அந்த அணியின் மோசமான பேட்டிங் மட்டுமே தோல்விக்கு முக்கிய காரணமாக உள்ளது. இந்த நிலையில் கவுகாத்தி மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்பதால், டெல்லி அணி பேட்ஸ்மேன்கள் ஃபார்மிற்கு வருவார்கள் என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் பிரித்வி ஷா இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடவில்லை என்றால், அவருக்கான வாய்ப்பு பறிபோகும் நிலைக்கு போகும்.

Rajasthan Royals to Play against Delhi Capitals at Guwahati Stadium in IPL 2023

ராஜஸ்தான் அணி தரப்பில் பட்லர் இன்றைய போட்டியில் காயம் காரணமாக களமிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதேபோல் டெல்லி அணியின் மிட்செல் மார்ஷ் திருமணத்திற்கு சொந்த ஊர் புறப்படுகிறார். இதனால் அவர்களின் இடங்களை எந்த வீரர் நிரப்ப போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல் டெல்லி அணி இன்றையப் போட்டியில் தோல்வியடைந்தால், நடப்பு ஐபிஎல் தொடரில் ஹாட்ரிக் தோல்வியை பெற்ற முதல் அணி என்ற மோசமான சாதனையை படைக்கும்.

Story first published: Saturday, April 8, 2023, 8:54 [IST]
Other articles published on Apr 8, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+