Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"வழக்கமா பேட்டிங் தானய்யா செய்வீங்க.. என்ன புதுசா பவுலிங்" டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு!

கொல்கத்தா: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 56வது லீக் போட்டியில் கொல்கத்தா அணியை எதிர்த்து ராஜஸ்தான் அணி களமிறங்கியுள்ளது. இரு அணிகளும் தலா 5 வெற்றிகள், 6 தோல்விகளுடன் உள்ளது. இதனால் தோல்வியடையும் அணிக்கு பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு முடிவுக்கு வரும் சூழல் உருவாகும். இதனால் இந்தப் போட்டி மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

Rajasthan Royals won the toss and chose to bowl against Kolkata

இந்த நிலையில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். ராஜஸ்தான் அணியில் ஜோ ரூட் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் குல்தீப் யாதவ் மற்றும் முருகன் அஸ்வின் நீக்கப்பட்டு, போல்ட் மற்றும் ஆசிஃப் சேர்க்கப்பட்டுள்ளனர். இன்னொரு பக்கம் கொல்கத்தா அணியில் வைபவ் அரோரா நீக்கப்பட்டு அனுகுல் ராய் சேர்க்கப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் அணி விவரம்: ஜெய்ஸ்வால், பட்லர், சஞ்சு சாம்சன், ஜோ ரூட், துருவ் ஜுரெல், ஹெட்மயர், அஸ்வின், போல்ட், சந்தீப் சர்மா, ஆசிஃப், சாஹல்

இம்பேக்ட் பிளேயர்ஸ்: ஃபெரைரா, படிக்க, ரியான் பராக், முருகன் அஸ்வின், நவ்தீப் சைனி

Rajasthan Royals won the toss and chose to bowl against Kolkata

கேகேஆர் அணி விவரம்: குர்பாஸ், ஜேசன் ராய், வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா, ரஸ்ஸல், ரிங்கு சிங், சுனில் நரைன், ஷர்துல் தாக்கூர், அனுகுல் ராய், ஹர்சித் ராணா, வருண் சக்கரவர்த்தி

இம்பேக்ட் பிளேயர்ஸ்: சுயஷ் சர்மா, வைபவ் அரோரா, ஜெகதீசன், உமேஷ் யாதவ், ஃபெர்குசன்

Story first published: Thursday, May 11, 2023, 19:16 [IST]
Other articles published on May 11, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+