வைபவ் சூர்யவன்ஷி அதிரடிக்கு முற்றுப்புள்ளி.. ஓடிப்போய் பாய்ந்து கேட்ச் பிடித்த ரஜத் படிதார்!
பெங்களூர்: 2026 துலீப் டிராபி கிரிக்கெட் அரையிறுதிப் போட்டியின் 3-வது நாள் ஆட்டத்தின் போது, கிழக்கு மண்டல அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் விக்கெட்டை வீழ்த்துவதற்காக மத்திய மண்டல கேப்டன் ரஜத் படிதார் பின்னோக்கி ஓடிவந்து பிடித்த கேட்ச் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
துலீப் டிராபி தொடரின் அரையிறுதிப் போட்டியின் 3-வது நாள் ஆட்டம் பெங்களூருவில் செப்டம்பர் 1 அன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் கிழக்கு மண்டல அணி 2-வது இன்னிங்ஸை விளையாடியது. முதல் இன்னிங்ஸில் 92 ரன்கள் குவித்து அசத்திய வைபவ் சூர்யவன்ஷி, 2-வது இன்னிங்ஸிலும் அதிரடியாக விளையாடினார். குறிப்பாக, யாஷ் தாக்கூர் வீசிய 14-வது ஓவரில் பவுண்டரி, சிக்ஸர், பவுண்டரி என அடுத்தடுத்து ரன்களைக் குவித்து அவர் 40 ரன்கள் எடுத்திருந்தார்.

அதே ஓவரின் 5-வது பந்தில் வைபவ் பந்தை லெக் சைடில் தூக்கி அடிக்க முயன்றார். ஆனால், பந்து சரியாக பேட்டில் படாமல் வானத்தில் மிக உயரே பறந்தது. மிட்-ஆன் திசையில் நின்றிருந்த மத்திய மண்டல கேப்டன் ரஜத் படிதார், பந்தை கவனித்தபடி பின்னோக்கி வேகமாக ஓடிவந்து, பவுண்டரி எல்லைக்கு அருகே காற்றில் பாய்ந்து பந்தைக் கச்சிதமாகப் பிடித்தார். ரஜத் படிதார் பிடித்த இந்த அசாதாரண கேட்ச், கிழக்கு மண்டலத்திற்கு ஒரு பெரிய பின்னடைவாக அமைந்தது. இதனால் 43 பந்துகளில் 40 ரன்கள் எடுத்திருந்த வைபவ் சூர்யவன்ஷி ஆட்டமிழந்து வெளியேறினார். அவரது அதிரடிக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ரஜத் படிதார்.
“2027 உலகக்கோப்பை அணியில் இவர் நிச்சயம் ஆடணும்.. பும்ராவுக்கு இணையாக..” .. உத்தப்பா வேண்டுகோள்
இந்தப் போட்டியில் மற்றொரு சுவாரசியமான கேட்ச் நிகழ்வும் நடந்தது. கிழக்கு மண்டல அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, தனது பந்துவீச்சிலேயே ஹர்ஷ் துபேயின் விக்கெட்டை வீழ்த்த ஒற்றை கையில் ஒரு சூப்பர் கேட்சைப் பிடித்து அசத்தினார். இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் காயம் காரணமாக கேப்டன் இஷான் கிஷன் வெளியேறியதால், வைபவ் சூர்யவன்ஷி கிழக்கு மண்டல அணியை தற்காலிக கேப்டனாக வழிநடத்தியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
