Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"யார் வந்தாலும், வராட்டியும் ஐபிஎல் நடக்கும்".. வெளிநாட்டு வீரர்கள் சிக்கல் - விட்டு விளாசிய பிசிசிஐ

மும்பை: ஐபிஎல் தொடரில் வெளிநாட்டு வீரர்கள் அதிக அளவில் பங்கேற்க முடியாத சூழல் நிலவும் நிலையில், பிசிசிஐ தரப்பில் சற்றே காட்டமான பதில் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் தொடர் என்பது இன்றைய தேதியின்படி இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களின் மோஸ்ட் ஃபேவரைட் உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களாகும்.

பிக்பேஷ், சிபிஎல், பிஎஸ்எல், இன்னும் இதர இதர நாடுகளின் டி20 தொடர்கள் எல்லாம், ஐபிஎல்-லை பார்த்து தான் தங்களை வடிவமைத்து, தகவமைத்து கொள்கின்றன.

வளமாக வலம்

வளமாக வலம்

அப்படிப்பட்ட மெகா டூரில், வருமானம், செலவு என்பதெல்லாம் வெறும் 100, 200 கோடி அளவில் கிடையாது. 2000 கோடி, 3000 கோடி என்று உலகின் காஸ்ட்லியஸ்ட் கிரிக்கெட் தொடராக வளமாக வலம் வந்து கொண்டிருக்கிறது. ஒரு ஐபிஎல் தொடர் நடத்தாமல் விட்டால், 4000 கோடி இழப்பு என்கிறது ஒரு புள்ளி விவரம். அப்படிப்பட்ட ஐபிஎல்-லை கொரோனா வந்து அசைத்துப் பார்த்துவிட்டது.

கொரோனா கணக்கு

கொரோனா கணக்கு

கடந்த ஆண்டே (2020) இந்தியாவில் கொரோனா ஊடுருவ, ஐபிஎல் தொடரை ஒத்தி வைத்து வேறுவழியின்றி, அமீரகத்தில் கொண்டு போட்டிகளை நடத்தியது. சரி.. இந்த சீசனையாவது சிறப்பாக நடத்தலாம் என்று கணக்குப் போட்டுக் கொண்டிருந்தால், வேறொரு கணக்கைப் போட்ட கொரோனா, பலம் பொருந்திய பயோ-பபுளை ஊதித்தள்ளி வீரர்கள், நிர்வாகிகள் என்று அடுத்தடுத்து நபர்களை ஆட்கொண்டு அதகளம் புரிந்தது.

சர்வதேச வீரர்கள்

சர்வதேச வீரர்கள்

பிறகு, தொடரை ஒத்திவைத்து, இப்போது ஒருவழியாக, செப்டம்பர் மாதம் மீண்டும் ஐபிஎல் நடக்கும் என்று அறிவித்திருக்கிறது பிசிசிஐ. அதே அமீரகத்தில் தான். ஆனால், இம்முறை 31 போட்டிகளே அங்க நடத்த வேண்டியிருக்கும் என்பதால், கூடுதல் செலவு சற்று குறையலாம். ஆனால், பிசிசிஐ-க்கும் சரி, அனைத்து அணிகளுக்கும் சரி.. ஒரே முக்கிய பிரச்சனை, வெளிநாட்டு வீரர்கள் மிஸ்ஸாவது தான். குறிப்பாக, இங்கிலாந்து வாரியம், தங்கள் நாட்டு வீரர்கள், ஐபிஎல் தொடர் மீண்டும் நடத்தப்பட்டால் அதில் பங்கேற்க மாட்டார்கள் என்று பகிரங்கமாக அறிவித்துவிட்டது. நியூசிலாந்து, ஆஸ்திரேலிய உள்ளிட்ட இதர நாடுகளின் அணிகளுக்கும் அடுத்தடுத்து சர்வதேச போட்டிகள் இருப்பதால், வீரர்கள் பங்கேற்க முடியாத சூழல் நிலவுகிறது.

இதனால் கோடிகளை கொட்டிக் குவித்து வீரர்களை வாங்கிய அணிகள், கலக்கத்தில் உள்ளன. இதற்கு ஒரு சரியான சாம்பிள் என்றால் அது பேட் கம்மின்ஸ் தான். ரூ.15.5 கோடிக்கு கொல்கத்தா அணியில் எடுக்கப்பட்ட பேட் கம்மின்ஸ், மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க மாட்டேன் என்று அறிவித்திருக்கிறார். இப்படி, பல வீரர்கள் மிஸ்ஸாகும் வாய்ப்பு உள்ள நிலையில், பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா சற்றே காட்டமாக இதுகுறித்து பேசியுள்ளார்.

ஐபிஎல் நடக்கும்

ஐபிஎல் நடக்கும்

பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை எந்தவித சிக்கலுமின்றி நடத்துவதற்கு ஏற்பாடு செய்யும் விதமாக அவர் அமீரகம் சென்றுள்ளார். இதுகுறித்து அவர் கலீஜ் டைம்ஸுக்கு அளித்த பேட்டியில், "வெளிநாட்டு வீரர்கள் தொடரில் கலந்து கொள்ள முடியாதது குறித்து ஆலோசித்து வருகிறோம். எங்களுக்கு ஒரே குறிக்கோள், தொடர் முழுமையாக நடத்தப்பட வேண்டும் என்பதே. பாதியில் நின்றுவிடக் கூடாது. எந்த வெளிநாட்டு வீரர்கள் விளையாட வந்தாலும் நல்லது தான். அதுபோல், எப்பேற்பட்ட வீரராக இருந்தாலும், அவர்கள் கலந்து கொள்ளாமல் போனாலும், நாங்கள் தொடரை நடத்தாமல் இருக்கப் போவதில்லை. யார் விளையாடினாலும், விளையாடாவிட்டாலும் ஐபிஎல் 2021 நடக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Monday, May 31, 2021, 16:47 [IST]
Other articles published on May 31, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+