"தலைவா".. ரஜினி ரசிகர்கள் தாறுமாறு ஹேப்பி.. ஏன் எதுக்கு எப்படி.. இதைப் படிங்க!
சென்னை: ரஜினி ரசிகர்களை ஒரே ஒரு டிவீட் போட்டு குஷியாக்கி விட்டார் நம்ம க்ருணால் பாண்டியா. வேறென்ன தனக்குப் பிடித்த செளத் இந்திய நடிகர் ரஜினிகாந்த் என்று கூறியுள்ளார் அவர்.
Recommended Video
கிரிக்கெட் போட்டிகள் ரத்தாகி விட்டன. பல போட்டித் தொடர்களை தள்ளிப் போட்டாச்சு.. எல்லாத்துக்கும் காரணம் இந்த கொரோனாவைரஸ். ஸோ, வேலையில்லாமல் போன நிலையில் கிரிக்கெட் வீரர்கள் சமூக வலைதளங்களில் படு பிசியாக உள்ளனர்.
விதம் விதமாக போஸ் கொடுத்தும், அதைச் செய்தும் இதைச் செய்தும் பொழுது போகிறது. அதுவும் போரடிக்கும்போது என் கிட்ட ஏதாவது கேள்வி கேளுங்களேன் என்று ரசிகர்களிடம் வந்து விடுகிறார்கள்.
சும்மாதான் இருக்கோம் கேளுங்க
ரசிகர்களும் சும்மாதானே இருக்கிறார்கள். எனவே அவர்களும் ஜாலியாக கேள்விகளைத் தொடுக்க, வீரர்களும் படு ஜாலியாக பதிலளிக்க என்று பொழுது ஒரு மாதிரியாக ஓடி விடுகிறது. அந்த வகையில் நம்ம க்ருணால் பாண்டியாவும் ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்து வருகிறார். அதில் ஒருவர் இப்படிக் கேட்டுள்ளார். உங்களுக்குப் பிடித்த தென்னிந்திய நடிகர் யார் என்று அவர் கேட்க, உடனே ரஜினிகாந்த் தலைவா என்று பதிலளித்துள்ளார் பாண்டியா.
ஹேப்பியான ரஜினி ரசிகர்கள்
உடனே ரஜினி ரசிகர்கள் ஜாலியாகி விட்டனர். பாண்டியாவை அடுத்த ரஜினி ரசிகர் மன்ற தலைவர் ரேஞ்சுக்கு மாற்றி விட்டனர். புகழ்ந்து குதூகலிக்க ஆரம்பித்து விட்டனர். ரஜினி தென்னிந்திய நடிகர் மட்டுமல்ல, அவர் தென்னிந்தியாவின் அடையாளம் என்று இவர்கள் வர்ணித்து டிவீட் போட்டுள்ளனர். இதிலும் பலர் வந்து கருத்துக்களைக் குவித்து வருகின்றனர்.
பிடித்த வீரர் யார்
சரி உங்களுக்குப் பிடித்த ஐபிஎல் வீரர் யார் என்று இன்னொரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு கிறிஸ் கெய்ல்தான் எனக்குப் பிடித்த ஐபிஎல் வீரர் என்று பதிலளித்துள்ளார் பாண்டியா. யுனிவர்சல் பாஸ் என்ற அவரது அடை மொழியையும் போட்டு விட்டுள்ளார். கெய்ல் ஒரு அதிரடி வீரர். அவரைப் பிடிக்காதவர்களே இருக்க முடியாது. அந்த வரிசையில் பாண்டியாவுக்கும் அவரைப் பிடித்துள்ளது.
இதற்குத்தான் ஆசைப்படுகிறேன்
ஏதாவது ஒரு டி20 இறுதிப் போட்டியில் நீங்கள் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் எந்தப் போட்டியில் விளையாட விரும்புவீர்கள். ஏன் என்று ஒரு கேள்வி. அதற்கு பாண்டியா அளித்துள்ள பதிலில், இந்தியா -பாகிஸ்தான் இடையிலான டி20 இறுதிப் போட்டிதான். அதை விட பெரிதாக வேறு என்ன இருந்து விட முடியும் என்று பதிலளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications