Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடி மோட்.. ரமீஸ் ராஜா கூறிய சுவாரஸ்ய ஐடியா.. செய்து பார்ப்பாரா ரோகித் சர்மா

நாக்பூர்: ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றி பெறுவதற்காக ஒரு வீரரை கொண்டு வந்தே தீர வேண்டும் என இந்திய கேப்டன் ரோகித் சர்மாவுக்கு பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா கூறியுள்ளார்.

இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் நாளை தொடங்கவுள்ளது. நாக்பூரில் உள்ள விதர்பா மைதானத்தில் காலை 9.30 மணிக்கு முதல் டெஸ்ட் தொடங்குகிறது.

இதற்காக தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டு வந்த இரு அணிகளும் தற்போது ப்ளேயிங் 11-ஐ தேர்வு செய்யும் பணிகளில் களமிறங்கியுள்ளனர். இந்திய அணியில் தான் நிறைய குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.

முதல் டெஸ்ட் போட்டி

முதல் டெஸ்ட் போட்டி

இந்திய அணியில் ரிஷப் பண்ட் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் என இரண்டு முக்கிய வீரர்கள் இல்லாதது பின்னடைவாக உள்ளது. பண்ட்-ன் இடத்திற்கு கே.எஸ்.பரத் அல்லது இஷான் கிஷான் இருவரில் யாரோ ஒருவர் நிரப்பப்படுவார். ஆனால் ஸ்ரேயாஸ் ஐயரின் இடத்தில் தான் சுப்மன் கில் ஆடுகிறாரா? அல்லது சூர்யகுமார் யாதவ் ஆடுகிறாரா என்ற குழப்பம் நீடித்து வருகிறது. இருவருமே நல்ல ஃபார்மில் இருப்பதால் ரசிகர்களும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

 ரமீஸ் ராஜா கருத்து

ரமீஸ் ராஜா கருத்து

இந்நிலையில் இதுகுறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா பேசியுள்ளார். அதில், இந்திய அணி சூர்யகுமார் யாதவை ஆட வைக்க வேண்டும். பேட்டிங்கில் ஒரு அதிரடியை அவரால் தான் தர முடியும். அவரின் அதிரடி ஆட்டம் எதிரணிக்கு அழுத்தத்தை கொடுக்கும். நிறைய டி20 வீரர்களை அணிக்குள் சேர்த்துள்ளனர். இதுவும் நல்லது தான். ஏனென்றால் சமீப காலமாக டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அதிரடிகளை பார்க்க ரசிகர்கள் விரும்புகின்றனர்.

ரசிகர்களின் மோகம்

ரசிகர்களின் மோகம்

பாகிஸ்தான் அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி எப்படி ஒரே நாளில் 350 - 400 ரன்களை அடித்தது என ரசிகர்கள் ஆச்சரியப்பட்டனர். பேட்டில் எந்த அளவிற்கு வேகத்தை ஏற்படுத்துகிறோமோ அந்த அளவிற்கு எதிரணிக்கு அழுத்தம் உண்டாகும். அந்தவகையில் பார்த்தால் இந்திய அனிக்கு அழுத்தத்தை கொடுக்க நிறைய வாய்ப்புகள் உண்டு.

ரோகித்திற்கு சோதனை

ரோகித்திற்கு சோதனை

ரோகித் சர்மாவுக்கு இது ஒரு பரிட்சையாக தான் இருக்கும். பாகிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலியா சமீபத்தில் சிறப்பான டெஸ்டை ஆடியது. கடைசி நாள் வரை ஆட்டத்தை சுவாரஸ்யமாக கொண்டு சென்றனர். அழுத்தத்தை கொடுப்பதில் பாகிஸ்தானை விட அவர்கள் நன்றாக செயல்பட்டனர். அதே வேலையை இந்தியாவிடமும் செய்ய அதிக வாய்ப்புள்ளது. எனினும் இந்தியாவை இந்திய மண்ணிலேயே தோற்கடிப்பது என்பது மிகவும் கடினம் ஆகும்.

Story first published: Wednesday, February 8, 2023, 19:57 [IST]
Other articles published on Feb 8, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+