Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG : ராஞ்சியில் நாளை மழைக்கு வாய்ப்பு? டிராவில் முடியுமா 4வது டெஸ்ட்? சிக்கலில் இந்திய அணி!

ராஞ்சி : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் ராஞ்சி நாளை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி ராஞ்சி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 353 ரன்களை குவித்துள்ளது. அதிகபட்சமாக நட்சத்திர வீரர் ஜோ ரூட் 122 ரன்களை விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

Ranchi Weather : Rain predicted in the Day 3 of the India - England 4th Test at Ranchi City

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 2வது நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 219 ரன்கள் சேர்த்தது. இந்திய அணியின் இளம் வீரர் துருவ் ஜுரெல் 30 ரன்களும், குல்தீப் யாதவ் 17 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர். 177 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், ஜுரெல் மற்றும் குல்தீப் இணைந்து ஓரளவிற்கு இந்திய அணியை மீட்டனர்.

இருப்பினும் இந்திய அணி இன்னும் 134 ரன்கள் பின் தங்கியுள்ளது. இதனால் 3வது நாளில் இந்திய அணி விரைவாக ஆல் அவுட்டாகும் பட்சத்தில் மிகப்பெரிய சிக்கலில் சிக்கும். ஏனென்றால் ராஞ்சி பிட்ச் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாகியுள்ள நிலையில், பவுன்ஸும் குறைவாக உள்ளது. இதனால் முதல் இன்னிங்ஸிலேயே 100 ரன்களுக்கு மேல் முன்னிலை பெற்றால், இங்கிலாந்து அணியால் எளிதாக 250 ரன்களை இலக்காக நிர்ணயிக்க முடியும்.

ஆனால் ராஞ்சி பிட்சில் 4வது இன்னிங்ஸில் 250 ரன்கள் இலக்கை விரட்டுவது எளிதல்ல. இதனால் இந்திய அணி தோல்வியடைய அதிக வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ராஞ்சியில் நாளை மதியம் 2 மணியளவில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. நாளை மட்டுமல்லாமல் 4வது நாள் ஆட்டமும் மழையால் பாதிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் ராஞ்சி முழுவதும் அல்லாமல் ராஞ்சியின் சில பகுதிகளில் மட்டும் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை பெய்யும் பட்சத்தில் 4வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடையவே அதிக வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது. இதனால் மழை வந்து இந்திய அணிக்கு டிரா செய்ய வாய்ப்பு வழங்குமா என்ற ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்துள்ளனர்.

Story first published: Saturday, February 24, 2024, 21:56 [IST]
Other articles published on Feb 24, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+