Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மகளை இழந்த கிரிக்கெட் வீரர்.. மனம் தளராமல் எடுத்த முடிவு.. சோதனையை கடந்து சாதனை

பரோடா: பிறந்து சில மாதங்களே ஆன தன் கைக்குழந்தை உயிரிழந்த நிலையில், ரஞ்சி கிரிக்கெட் வீரர் துக்கத்தை தாண்டி சாதனை படைத்துள்ளார்.

ஓடிசா மாநிலம் புபனேஸ்வரில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் பி சுற்று போட்டிகள் நடைபெற்றன.

இதில் பரோடா அணியும், சந்திகார் அணியும் மோதி வருகின்றன. இந்தப் போட்டிக்காக இரு அணி வீரர்களும் புபனேஸ்வரில் பயிற்சி செய்து வந்தனர்.

தொலைப்பேசி அழைப்பு

தொலைப்பேசி அழைப்பு

அப்போது, பரோடா அணியின் விஷ்ணு சோலங்கிக்கு நெஞ்சை பிளக்கும் செய்தி ஒன்று வந்துள்ளது. பிறந்து சில மாதங்களே ஆன தனது பெண் குழந்தை, மரணமடைந்துவிட்டதாக தொலைப்பேசி அழைப்பு வந்துள்ளது. இதனால் மணமுடைந்த விஷ்ணு சோலங்கி உடனடியாக விமானம் மூலம் தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளார்.

இறுதி சடங்கு

இறுதி சடங்கு

பிறந்து சில மாதங்களே ஆன குழந்தையால் வாழ்க்கை வண்ண மையமாக மாறி இருக்கும் என எதிர்பார்த்து கிரிக்கெட் விளையாட சென்றவர், தனது மகளை உயிறற்ற நிலையில் கண்டு அழுது புலம்பியுள்ளார். பின்னர், ஆசை ஆசையாய் பெற்ற மகளுக்கு தாமே இறுதிச் சடங்கை நடத்தியுள்ளார். அப்போது பயிற்சியாளர், விஷ்ணு சோலங்கியை தொடர்பு கொண்டு விடுமுறை எடுத்துக் கொள்ள கூறியுள்ளார்.

சதம் விளாசல்

சதம் விளாசல்

ஆனால் விஷ்ணு சோலங்கி அதனை கேட்காமல், மூன்றாவது நாளே அணிக்கு திரும்பி போட்டியில் பங்கேற்றுள்ளார். சந்திகார் முதல் இன்னிங்சில் 168 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பரோடா அணியில் விளையாடிய விஷ்ணு சோலங்கி, 161 பந்துகளில் 103 ரன்கள் அடித்துள்ளார். இதில் 12 பவுண்ரிகள் அடங்கும். தனது மகளின் நினைவாக சதம் விளாசிய விஷ்ணு மைதானத்திலேயே அழுதார்.

நெகிழ்ச்சி

நெகிழ்ச்சி

விஷ்ணு சோலங்கியின் இந்த உணர்ச்சிப்பூர்வமான செயல், சக வீரர்கள் மற்றும் ரசிகர்களையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது. சௌராஷ்டிர வீரர் ஜாக்சன், இந்த தகவலை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு விஷ்ணு சோலங்கியை வெகுவாக பாராட்டியுள்ளார். சச்சின்,கோலி, முகமது சிராஜ் ஆகியோர் தனது தந்தையை இழந்து கிரிக்கெட் போட்டிக்கு திரும்பியது போல், விஷ்ணு சோலங்கியும் பேரிழப்பை தாண்டி சாதனை படைத்துள்ளார்.

Story first published: Saturday, February 26, 2022, 16:30 [IST]
Other articles published on Feb 26, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+