Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டி.. பெங்காலை சிதறடித்த உனாட்கட், சேத்தன் சுக்கரியா.. சௌராஷ்டிரா அபாரம்

கொல்கத்தா : ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பெங்கால் அணியும், சௌராஷ்டிரா அணியும் பலப்பரீட்சை நடத்தி வருகிறது.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றும் வரும் இறுதி ஆட்டத்தில், டாஸ் வென்ற சௌராஷ்டிரா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இந்த ஆட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய அணியில் இடம்பெற்று இருந்த ஜெய்தேவ் உனாட்கட், சௌராஷ்டிரா அணிக்காக களமிறங்கி அசத்தினார்.

அபார பந்துவீச்சு

அபார பந்துவீச்சு

உனாட்கட் தனது அனுபவத்தையும், திறமையையும் இன்றைய ஆட்டத்தில் வெளிப்படுத்தி பெங்கால் அணி வீரர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். ஆசிய ஆடுகளத்தில் கூட இப்படி பந்துவீச முடியுமா என்பதை உனாட்கட் இன்று செய்து காட்டினர்.உனாட்கட் பந்தின் மூலம் எழுப்பிய கேள்விகளுக்கு பெங்கால் பேட்ஸ்மேன்களால் பதில் சொல்ல முடியவில்லை.

டக் அவுட்

டக் அவுட்

இதே போன்று, இளம் வேகப்பந்துவீச்சாளர் சேத்தன் சூக்கரியா அபாரமாக பந்துவீசியதால் , பெங்கால் அணி பேட்ஸ்மேன்கள் மத்தளம் போல் அடி வாங்கினார்கள். இந்திய அணிக்காக விளையாட வாய்ப்புக்காக காத்திருந்த பெங்கால் அணியின் அபிமன்யூ ஈஸ்வரன் டக் அவுட் ஆனார்.

போராட்டம்

போராட்டம்

மற்றொரு தொடக்க வீரர் சுமந்த் குப்தா 1 ரன்னிலும், சுதீப் குமார் டக் அவுட்டாகியும், கேப்டன் மனோஜ் திவாரி 7 ரன்களிலும் பெவிலியன் திரும்பினர். இதனால் 34 ரன்கள் சேர்ப்பதற்குள் பெங்கால் அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து ஷாபாஸ் அகமது மற்றும் அபிசேக் போரேல் ஆகியோர் பொறுப்பாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டனர்.

174 ரன்களில் அவுட்

174 ரன்களில் அவுட்

அபிசேக் பாரேல் 50 ரன்களிலும், ஷாபாஸ் அகமது 69 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற, பெங்கால் அணி 174 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சௌராஷ்டிரா அணியில் சேத்தன் சுக்கரியா, ஜெய்தேவ் உனாட்கட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். தற்போது சௌராஷ்டிரா அணி முதல் இன்னிங்சில் விளையாடி வருகின்றனர்.

Story first published: Thursday, February 16, 2023, 16:42 [IST]
Other articles published on Feb 16, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+