Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மனுஷனா நீ.. 21 ஆயிரம் ரன்கள், 66 சதங்கள்.. கவாஸ்கர், சச்சின், டிராவிட் வரிசையில் இணைந்த புஜாரா!

ராஜ்கோட்: முதல்தர கிரிக்கெட்டில் 21 ஆயிரம் ரன்களை விளாசிய 4வது வீரர் என்ற சாதனையை நட்சத்திர வீரர் புஜாரா படைத்துள்ளார். சத்தீஸ்கர் அணிக்கு எதிரான போட்டியில் தனது 66வது சதத்தை விளாசியதன் மூலமாக இந்த சாதனையை புஜாரா படைத்துள்ளார்.

இந்திய அணிக்காக 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 19 சதங்கள், 35 அரைசதங்கள் உட்பட 7,195 ரன்களை விளாசியவர் புஜாரா. ஆஸ்திரேலியா மண்ணில் தொடர்ச்சியாக 2 முறை பார்டர் கவாஸ்கர் கோப்பையை இந்திய அணி வெல்வதற்கு காரணமாக இருந்தவர். இளம் வீரர்களை கொண்டு வருவதற்காக புஜாரா இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

ranji trophy cheteshwar pujara sachin tendulkar

இதன்பின் மீண்டும் இந்திய அணிக்குள் வருவதற்காக புஜாரா தீவிரமாக போராடி வருகிறார். அந்த வகையில் ஒரு பக்கம் கவுண்டி கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருவதோடு, இன்னொரு பக்கம் இந்திய உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி டிராபியில் ஆடி வருகிறார். இந்த நிலையில் சத்தீஸ்கர் அணிக்கு எதிரான போட்டியில் செளராஷ்டிரா அணி விளையாடி வருகிறது.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சத்தீஸ்கர் அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 578 ரன்களை குவித்தது. இதன்பின் களமிறங்கிய செளராஷ்டிரா அணி 13 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது. இதன்பின் களமிறங்கிய புஜாரா வழக்கம் போல் ஒரு பக்கம் நங்கீரமிட்டு நின்றார். சிறப்பாக ஆடிய புஜாரா தற்போது வரை 236 பந்துகளில் 15 பவுண்டரிகள் உட்பட 138 ரன்களை விளாசி களத்தில் இருக்கிறார்.

இதன் மூலமாக முதல்தர கிரிக்கெட்டில் புஜாரா தனது 66வது சதத்தை விளாசி சாதனை படைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் முதல்தர கிரிக்கெட்டில் அதிக சதங்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் புஜாரா 3வது இடத்தில் இருக்கிறார். சுனில் கவாஸ்கர் மற்றும் சச்சின் டெண்டுல்கர் இருவரும் தலா 81 சதங்களுடன் முதலிடத்திலும், ராகுல் டிராவிட் 68 சதங்களுடன் 2வது இடத்திலும் இருக்கின்றனர்.

அதேபோல் இந்தப் போட்டியில் சதம் விளாசியதன் மூலமாக முதல்தர கிரிக்கெட்டில் 21 ஆயிரம் ரன்களை விளாசிய வீரர் என்ற புதிய வரலாற்றை புஜாரா படைத்துள்ளார். முதல்தர கிரிக்கெட்டில் அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் சுனில் கவாஸ்கர் 25,834 ரன்களுடன் முதலிடத்திலும், சச்சின் டெண்டுல்கர் 25,396 ரன்களுடன் 2வது இடத்திலும், ராகுல் டிராவிட் 23,794 ரன்களுடன் 3வது இடத்திலும் இருக்கின்றனர்.

இவர்களுக்கு பின் 21,016 ரன்களுடன் புஜாரா 4வது இடத்தில் இருக்கிறார். இதனால் சர்வதேச கிரிக்கெட் மட்டுமல்லாமல் முதல்தர கிரிக்கெட்டிலும் புஜாரா ஜாம்பவான் அந்தஸ்தை பெற்றுள்ளார். ராகுல் டிராவிட்டுக்கு பின் இந்தியாவின் மிகச்சிறந்த டெஸ்ட் கிரிக்கெட்டர்களில் ஒருவராக உயர்ந்துள்ள புஜாராவை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

Story first published: Monday, October 21, 2024, 12:39 [IST]
Other articles published on Oct 21, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+