Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சர்பராஸ் கான் தம்பி கலக்கல்.. அண்ணணை போல் முஷீர் கானும் சதம்.. ரஞ்சி கோப்பையில் மும்பை ரன் குவிப்பு

Musheer Khan : இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி அண்ணன் சர்ஃபாஸ்கான் அபாரமாக விளையாடி ரசிகர்களின் நன்மதிப்பை பெற்றார். ரஞ்சி கிரிக்கெட்டில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக அபாரமாக விளையாடி வருகிறார்.

ஒரு கட்டத்தில் டான் பிராட்மேனுக்கு பிறகு அதிக சராசரி வைத்திருந்த வீரர் என்ற பெருமையும் சர்பராஸ்கானுக்கு கிடைத்தது. இந்த நிலையில் அவருடைய தம்பி முஷீர்கான் அண்டர் 19 கிரிக்கெட்டில் விளையாடி தன்னுடைய திறமையை நிரூபித்தார்.

 Ranji trophy 2024 - Musheer Khan scored century in Mumbai vs Baroda quater final game


இந்த நிலையில் தம்பி முஷீர்கானுக்கு ரஞ்சி கோப்பையில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. ஸ்ரேயாஸ் ஐயர் ரஞ்சி போட்டியிலிருந்து விலகி ஐபிஎல் தொடருக்காக தயாராகி வருகிறார். இந்த நிலையில் தம்பி முஷீர்கான் தற்போது ரஞ்சி கிரிக்கெட்டில் ஸ்ரேயாஸ் இடத்தில் விளையாடி வருகிறார். பரோடா அணிக்கு எதிரான காலிறுதி ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் தேர்வு செய்தது. இதில் அதிரடி வீரர் பிரித்வி ஷா 46 பந்துகளை எதிர் கொண்டு 33 ரன்கள் சேர்த்தார். இதில் ஆறு பவுண்டரிகள் அடங்கும். மற்றொரு தொடக்க வீரரான பூபன் 19 ரன்களில் வெளியேற முஷீர்கான் களத்திற்கு வந்தார். பரோடா பவுலர்களின் ஆதிக்கம் இருந்ததை உணர்ந்த முஷீர் கான் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ஆனால் மறுபுறம் அனுபவ வீரரான ரஹானே மூன்று ரன்களில் போல்ட் ஆனார். இதைப் போன்று ஷாம்ஸ் முலானி 6 ரன்களிலும், சூரியனாஸ் 20 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேற மும்பை அணி 142 ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுபக்கம் முஷீர் கான் எந்த கவலையும் இன்றி தன்னுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அவருக்கு ஹர்திக் தாமூர் நல்ல துணையாக நிற்க முஷீர் கான் சதம் விளாசினார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் மும்பை அணி 90 ஓவர் முடிவில் ஐந்து விக்கெட் இழப்பருக்கு 248 ரன்கள் எடுத்திருக்கிறது. 216 பந்துகளை எதிர் கொண்ட முஷீர் கான் 128 ரன்கள் எடுத்து களத்தில் ஆட்டம் இழக்காமல் நிற்கிறார். இன்று மட்டும் அவர் 10 பவுண்டரிகள் அடித்து இருந்தார்.அண்ணனைப் போல் தம்பியும் ரஞ்சிப் போட்டியில் சதம் அடித்திருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Story first published: Friday, February 23, 2024, 17:20 [IST]
Other articles published on Feb 23, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+