Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரஞ்சி கோப்பை 2024 - அதிக ரன்கள், அதிக விக்கெட் வீழ்த்திய டாப் 5 வீரர்கள் யார்?

மும்பை : ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் தான் இந்திய கிரிக்கெட்டிலே பிரதான உள்நாட்டு தொடராகும். தற்போது இந்திய அணி பல டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ள நிலையில் தற்போது ரஞ்சி கிரிக்கெட் தொடரில் யார் சிறப்பாக விளையாடுகிறார்களோ அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் தற்போது மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் யார் அதிக ரன்கள் பெற்றிருக்கிறார்கள் என்பதை தற்போது பார்க்கலாம். இந்தப் பட்டியலில் முதலிடத்தை பிடித்திருப்பவர் சௌராஷ்டிரா அணி சேர்ந்த புஜாராதான்.

Ranji trophy 2024 - top 5 Most runs and most wickets stats by a players

புஜாரா இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடி 5 இன்னிங்ஸில் 444 ரன்கள் குவித்திருக்கிறார். இதில் ஒரு இரட்டை சதம் ஒரு அரை சதம் அடங்கும். இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தை கோவா வீரர் பிரபுதேசாய் பெற்று இருக்கிறார். இவர் மூன்று போட்டிகளில் 386 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் இரண்டு சதம் அடங்கும்.

இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை அசாம் வீரர் ரியான் பராக் பெற்று இருக்கிறார். இவர் மூன்று போட்டிகளில் 378 ரன்கள் குவித்திருக்கிறார். இதில் இரண்டு சதம் அடங்கும் இந்தப் பட்டியலில் நான்காம் இடத்தை ரிக்கி புயி பெற்றிருக்கிறார். இவர் மூன்று போட்டியில் விளையாடி 372 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் இரண்டு சதம் அடங்கும்.

இதைப் போன்று இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தை கர்நாடகா வீரர் தேவதட் படிக்கல் பெற்றிருக்கிறார். இவர் மூன்று போட்டிகளில் விளையாடி 369 ரன்கள் பெற்றிருக்கிறார். இதில் இரண்டு சதம் அடங்கும். இதேபோன்று தற்போது ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் நடப்பு சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.

இந்த பட்டியலில் பாண்டிச்சேரி அணிக்காக விளையாடிய கௌரவ் யாதவ் மூன்று போட்டியில் விளையாடி 23 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தை ஹித்தேஷ் வாலுஞ்ச் என்ற வீரர் பெற்று இருக்கிறார். இவர் மூன்று போட்டியில் விளையாடி 19 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தை பரோடா வீரர் பார்கவ் பாத் பெற்றிருக்கிறார்.

இவர் மூன்று போட்டிகளில் விளையாடி 18 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். இதேபோன்று நான்காவது இடத்தை பாண்டிச்சேரி அணிக்காக விளையாடும் சாகர் உதேசி பெற்று இருக்கிறார். இவர் இரண்டு போட்டிகளில் விளையாடி 18 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தை தீபக் கப்போலா பெற்றிருக்கிறார். இவர் மூன்று போட்டியில் விளையாடி 17 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.

Story first published: Tuesday, January 23, 2024, 6:05 [IST]
Other articles published on Jan 23, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+