Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரஞ்சி கோப்பை 2025 சீசன் தொடக்கம்.. கவனிக்க வேண்டிய வீரர்கள் யார்? எந்த சேனல், ஒடிடியில் பார்ப்பது?

மும்பை: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 15ஆம் தேதி நாளை தொடங்குகிறது. 32 அணிகள் பங்கு பெறும் இந்தத் தொடரில் மொத்தம் 138 போட்டிகள் நடைபெற உள்ளன. இந்தத் தொடர் மொத்தம் இரண்டு பகுதிகளாக நடைபெற உள்ளது. நவம்பர் 19ஆம் தேதி வரை ரஞ்சி கோப்பையில் முதல் சில சுற்று நடைபெறும்.

அதன் பின்பு சையது முஸ்தாக் அலி கோப்பை மற்றும் விஜய் ஹசாரே கோப்பை போன்ற வெள்ளை நிற கிரிக்கெட் பந்து தொடர் நடத்தப்படுகிறது. இதனை அடுத்து ஜனவரி மாதம் மீண்டும் ரஞ்சி கோப்பையின் நாக் அவுட் சுற்று போட்டிகள் நடத்தப்படும்.

Ranji Trophy 2025

42 முறை சாம்பியன் ஆன மும்பை அணி தற்போது புதிய கேப்டனான சர்துல் தாக்கூர் தலைமையில் களமிறங்குகிறது. கடந்த சீசனில் கேப்டனாக இருந்த ரகானே இந்த சீசனில் வெறும் வீரராக களமிறங்குகிறார். இதே போன்று நடப்பு சாம்பியனும் இராணி கோப்பையை கைப்பற்றிய விதர்பா அணியும் இம்முறை மீண்டும் பலமான வீரர்களைக் கொண்டு களமிறங்குகிறது.

அது மட்டுமில்லாமல் கடந்த 20 ஆண்டுகளுக்குப் பிறகு புஜாரா இல்லாமல் முதல் முறையாக ரஞ்சி தொடர் இந்த ஆண்டு நடத்தப்படுகிறது. இதே போன்று ஜார்க்கண்ட் அணியில் இசான் கிஷனும், மத்திய பிரதேஷ் அணியின் ரஜத் பட்டிதார் தலைமை தாங்குகின்றனர். பெங்கால் அணியில் அபிமன்யு ஈஸ்வரன், முகமது சமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

காயம் காரணமாக விளையாடாமல் இருந்த சர்ஃபிராஸ் கான் தற்போது மீண்டும் ரஞ்சிகோப்பைக்கு திரும்பியுள்ளார். கடந்த சீசனில் 69 விக்கெட்டுகளை வீழ்த்திய ஹார்ஸ் துபே, கேரளா வேகப்பந்துவீச்சாளர் ஈடன் ஆப்பிள் உள்ளிட்டோர் இந்த தொடரில் கவனிக்கத்தக்க வீரர்களாக இருப்பார்கள். இதேபோன்று பிரித்வி ஷா, ருதுராஜ் மற்றும் ஜலாஜ் சக்சேனா ஆகியோர் அடங்கிய மகாராஷ்டிரா அணியும் கவனத்தை பெற்றுள்ளது.

அனுபவ வீரரான ஹனுமா விகாரி திரிபுரா அணிக்காக இம்முறை விளையாடுகிறார். நான்கு நாட்கள் நடைபெறும் ரஞ்சி கோப்பையின் முதல் ரவுண்டு அக்டோபர் 15ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த போட்டிகள் அனைத்தும் ஒன்பது முப்பது மணிக்கு தொடங்குகிறது. இந்தப் போட்டிகள் அனைத்தும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கேல் டிவியில் பார்க்கலாம். ஜியோ ஹாட்ஸ்டார் இல் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

Story first published: Tuesday, October 14, 2025, 23:28 [IST]
Other articles published on Oct 14, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+