For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரஞ்சி கோப்பையில் இன்று.. சதத்தை நெருங்கும் புஜாரா, ரஹானே.. ராகுல் ஏமாற்றம்.. கோலி பேட்டிங் எப்போது?

மும்பை : ரஞ்சி கிரிக்கெட் தொடரின் நாக் அவுட் சுற்றுக்கு முந்தைய ஆட்டம் இன்று நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் 13 ஆண்டுகளுக்கு பிறகு விராட் கோலி விளையாடுவதால், அனைவரின் கவனமும் அங்கு தான் சென்றது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற ரஞ்சி போட்டியில் என்ன முக்கிய சம்பவம் நடைபெற்றது? எந்த ஸ்டார் வீரர்கள் எவ்வளவு ரன்கள் அடித்தார்கள் என்பதை தற்போது பார்க்கலாம்.

டெல்லி கோட்லா மைதானத்தில் 15 ஆயிரத்து மேற்பட்ட ரசிகர்கள் இந்த போட்டியை பார்த்தனர். டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து களமிறங்கிய ரயில்வே அணி 241 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது.

ranji trophy 2025 delhi vs railways virat kohli pujara



இதை அடுத்து முதல் நாள் ஆட்டம் நேர முடிவில் டெல்லி அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 41 ரன்கள் எடுத்திருக்கிறது. இந்த சூழலில் விராட் கோலி நான்காவது வீரராக களமிறங்குவதால்,வெள்ளிக்கிழமை அவருடைய பேட்டிங்கை ரசிகர்கள் காணலாம். மும்பையில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் மேகாலயாவை மும்பை எதிர்கொண்டது. இதில் ஷர்துல் தாக்கூர் ஹார்ட்ரிக் சாதனையை நிகழ்த்தினார்.

மேகலயா அணி 86 ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனை அடுத்து பேட்டிங் செய்த மும்பை அணியில் ரஹானே ஆட்டமிழக்காமல் 83 ரன்கள், சித்தேஷ் லாட் 89 ரன்களும் எடுத்து களத்தில் இருக்கிறார்கள். இதன் மூலம் மும்பை அணி 128 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது. இதேபோன்று பெங்களூரில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் ஹரியானாவும் கர்நாடகா அணியும் பலப்பரீட்சை நடத்தியது.

இதில் கே எல் ராகுல் கர்நாடகா அணியில் இடம் பெற்றிருந்தார். ராகுல் மூன்றாவது வீரராக களமிறங்கினார். பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராகுல் 26 ரன்களில் சிஎஸ்கே வீரர் அன்சூல் கம்போஜ் வேகத்தில் ஆட்டம் இழந்தார். கேப்டன் மாயாங் அகர்வால் அதிகபட்சமாக 91 ரன்கள் எடுக்க, கர்நாடகா அணி 267 ரன்களுக்கு ஐந்து விக்கெட் இழந்து விளையாடி வருகிறது.

இந்த நிலையில் அசாம் அணிக்கு எதிரான சௌராஷ்டிரா விளையாடியது. இதில் புஜாரா அபாரமாக விளையாடி வருகிறார். புஜாரா 95 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் உள்ளனர். இதன் மூலம் 67 ஆவது முதல் தர சதத்தை புஜாரா நெருங்குகிறார். சௌராஷ்டிரா அணி 3 விக்கெட் இழப்பிற்கு 361 ரன்கள் எடுத்தது. இது போன்று விதர்பா அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஹைதராபாத் அணியில் முகமது சிராஜ் இடம் பெற்றார்.

இதில் 18 ஓவர்கள் வீசிய முகமது சிராஜ் ஒரு விக்கெட் வீழ்த்தினார். இதில் விதர்பா 190 ரன்களில் ஆட்டம் இழந்தது. ஜார்க்கண்ட் அணிக்கு எதிரான மற்றொரு லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு அணி 106 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. முதலில் விளையாடிய ஜார்கண்ட் அணி 185 ரன்கள் ஆட்டம் இழந்தது. இதனை அடுத்து தமிழ்நாடு அணி பேட்டிங் செய்தது. 40 ரன்கள் 8 விக்கெட்டுகளை இழந்து தமிழ்நாடு அணி தடுமாறியது. இதை அடுத்து தப்பி தவறிய தமிழ்நாடு அணி 106 ரன்களில் ஆட்டமிழந்தது. முதல் நாள் ஆட்ட நேரம் முடிவில் ஜார்க்கண்ட் அணி 84 ரன்கள் முன்னிலை பெற்று, 2வது இன்னிங்சில் ஒரு விக்கெட் இழப்பிற்கு
5 ரன்கள் எடுத்துள்ளது.

Story first published: Thursday, January 30, 2025, 19:44 [IST]
Other articles published on Jan 30, 2025
English summary
Ranji Trophy 2025 Today Round up- Puajara and Rahane nears centuryரஞ்சிகோப்பை இன்று நடந்தது என்ன.. சதம் நெருங்கும் ஸ்டார்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+