Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரஞ்சி கோப்பை 2026: துசார் தேஷ்பாண்டே ஹாட்ரிக் சாதனை.. 78 ரன்களில் சுருண்ட சந்திகார் அணி

மும்பை: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் மும்பை அணிக்காக ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய 6-வது பந்துவீச்சாளர் என்ற வரலாற்றுச் சாதனையை வேகப்பந்துவீச்சாளர் துஷார் தேஷ்பாண்டே படைத்துள்ளார். மும்பை வான்கடே மைதானத்தில் சண்டிகர் அணிக்கு எதிராக நடைபெற்ற 2026-27 ரஞ்சி கோப்பை எலைட் குரூப் 'டி' போட்டியின் இரண்டாம் நாளில் அவர் இந்த மைல்கல்லை எட்டினார்.

சண்டிகர் அணியின் முதல் இன்னிங்ஸின் 11-வது ஓவரில் துஷார் தேஷ்பாண்டே இந்த சாதனையை செய்தார். அந்த ஓவரின் மூன்றாவது பந்தில் அர்ஜுன் ஆசாத், நான்காவது பந்தில் சிவம் பம்ப்ரி, ஐந்தாவது பந்தில் திபேந்தர் குஷ் ஆகிய மூவரையும் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழக்கச் செய்து ஹாட்ரிக் சாதனை படைத்தார். முதல் இன்னிங்ஸில் 7 ஓவர்கள் வீசிய அவர், 17 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

Tushar Deshpande

துஷார் தேஷ்பாண்டேவின் அபாரமான பந்துவீச்சால் சண்டிகர் அணி தனது முதல் இன்னிங்ஸில் 78 ரன்களுக்கு சுருண்டது. முன்னதாக, மும்பை அணி தனது முதல் இன்னிங்ஸில் 136.5 ஓவர்களில் 429 ரன்கள் குவித்தது. மும்பை தரப்பில் சித்தேஷ் லாட் 86 ரன்களும், முஷீர் கான் 65 ரன்களும், தனுஷ் கோடியான் 58 ரன்களும், மோஹித் அவஸ்தி ஆட்டமிழக்காமல் 56 ரன்களும் எடுத்தனர். துஷார் தேஷ்பாண்டே பேட்டிங்கிலும் சிறப்பான பங்களிப்பை வழங்கி 44 ரன்கள் சேர்த்தார். சண்டிகர் தரப்பில் ராஜ் பாவா 73 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும், ரோஹித் தண்டா 78 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

IND vs WI: இந்த 2 வீரரை நீக்கிய கம்பீர் முடிவு சரியானது தான்.. புஜாரா பாராட்டு

IND vs WI: இந்த 2 வீரரை நீக்கிய கம்பீர் முடிவு சரியானது தான்.. புஜாரா பாராட்டு

முதல் இன்னிங்ஸில் 351 ரன்கள் முன்னிலை பெற்ற மும்பை அணி, சண்டிகர் அணியை ஃபாலோ-ஆன் செய்யப் பணித்தது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், சண்டிகர் அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட் இழப்பிற்கு ரன் எதுவும் எடுக்காமல் திணறி வருகிறது. இரண்டாவது இன்னிங்ஸிலும் துஷார் தேஷ்பாண்டே தனது முதல் ஓவரிலேயே விஷ்ணு காஷ்யப்பின் விக்கெட்டை வீழ்த்தினார்.

IND vs WI: திலக் வர்மா கடற்கரையில் நடப்பது போல் ரன் அவுட் ஆகிவிட்டார்.. சடகோபன் ரமேஷ் கடும் சாடல்

Also Read

IND vs WI: திலக் வர்மா கடற்கரையில் நடப்பது போல் ரன் அவுட் ஆகிவிட்டார்.. சடகோபன் ரமேஷ் கடும் சாடல்

ரஞ்சி கோப்பை வரலாற்றில் மும்பை அணிக்காக முதன்முதலில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியவர் ஜஹாங்கீர் கோட் ஆவார். அவர் 1943-44 சீசனில் பரோடா அணிக்கு எதிராக இச்சாதனையைப் படைத்தார். அவரைத் தொடர்ந்து உமேஷ் குல்கர்னி, அப்துல் இஸ்மாயில், ராய்ஸ்டன் டயஸ் மற்றும் சார்தூல் தாக்குர் ஆகியோர் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

Story first published: Tuesday, October 13, 2026, 7:00 [IST]
Other articles published on Oct 13, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+