Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரஞ்சி கோப்பைப் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டது தமிழகம்.. புத்தாண்டின் முதல் சோகம்!

சென்னை: சென்னையில் நடந்த ரஞ்சிக் கோப்பை காலிறுதிக்கு முந்தைய ஆட்டத்தில் பரிதாபகரமாக தோல்வியடைந்து காலிறுதிக்குள் நுழையும் வாய்ப்பை இழந்துள்ளது தமிழ்நாடு.

மேலும் 6வது இடத்திற்கும் அது தள்ளப்பட்டு விட்டது.

சொந்த மண்ணில் நடந்த இந்த போட்டி படு பரபரப்பாக போனது. கடைசி நேரத்தில் ஜஸ்ட் 4 ரன்களில் பெங்கால் அணி, தமிழகத்தைத் தோற்கடித்து காலிறுதிக்குள் நுழைந்தது.

சேப்பாக்கத்தில் பரபரப்பு

சேப்பாக்கத்தில் பரபரப்பு

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் தமிழ்நாடு, பெங்கால் இடையிலான போட்டி நடந்தது.

183 ரன்கள் வெற்றி இலக்கு

183 ரன்கள் வெற்றி இலக்கு

இதில் தமிழக அணி வெற்றி பெறுவதற்கு 185 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து 2வது இன்னிங்ஸைத் தொடங்கிய தமிழக அணியை, பெங்கால் பந்து வீச்சாளர்கள் பதம் பார்த்து விட்டனர்.

சடசடவென சரிந்த விக்கெட்கள்

சடசடவென சரிந்த விக்கெட்கள்

3வது நாள் ஆட்டத்தின்போது தமிழக வீரர்கள் சடசடவென சரிந்தனர். பத்ரிநாத் 21, தினேஷ் கார்த்திக் 62, அபராஜித் 33 ரன்னிலும் வெளியேறினர்.

4 ரன்களில் தோல்வி

4 ரன்களில் தோல்வி

கடைசியில் 180 ரன்களுக்கு தமிழகம் வீழ்ந்தது. இதனால் 4 ரன்களில் தமிழக அணி தோல்வியைச் சந்தித்தது.

செளரசிஷ் லஹிரி அபாரம்

செளரசிஷ் லஹிரி அபாரம்

பெங்கால் பந்து வீச்சாளர் செளரசிஷ் லஹிரி, 7 விக்கெட்களை வீழ்த்தி தமிழகத்தை முறித்துப் போட்டு விட்டார்.

6வது இடமே

6வது இடமே

நடப்பு ரஞ்சி தொடரில் இதுவரை 8 போட்டிகளை ஆடிய தமிழ்நாடு ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்றது. 6 டிரா மற்றும் ஒரு தோல்வியைக் கண்டது. 18 புள்ளிகளுடன் தனது பிரிவில் அது 6வது இடத்திற்குப் போய் விட்டது.

Story first published: Thursday, January 2, 2014, 12:16 [IST]
Other articles published on Jan 2, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+