Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோகித் சர்மாவின் விக்கெட்டை வீழ்த்திய பிறகு கொண்டாடாதது ஏன்? காஷ்மீர் வீரர் உமர் உருக்கம்

மும்பை : ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பிய இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா காஷ்மீர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெறும் மூன்று ரன்களை மட்டுமே சேர்த்தார். இதேபோன்று மற்ற மும்பை அணி வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்ததார்.

33.2 ஓவர்களில் மும்பை அணி 12 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதில் காஷ்மீர் அணியின் வேகப்பந்துவீச்சாளர் உமர் நசீர் 41 ரன்கள் விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார். மற்றொரு வீரரான யுத்வீர் 31 ரன்கள் விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ranji trophy rohit sharma jaiswal mumbai vs kashmir

இந்த நிலையில் ரோகித் சர்மாவின் விக்கெட்டை வீழ்த்திய உமர் நசீர் எதுவும் கொண்டாடாமல் அமைதியாக இருந்தார்.இது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. தாம் ஏன் ரோஹித்தின் விக்கெட்டை வீழ்த்திவிட்டு கொண்டாடவில்லை என்பது குறித்து உமர் நசீர் தற்போது பேட்டி அளித்திருக்கிறார். அதில் ரோகித் சர்மாவின் மிகப்பெரிய ரசிகன் நான்.

அதன் காரணமாகத்தான் அவருடைய விக்கெட்டை வீழ்த்தியவுடன் என்னால் கொண்டாட முடியவில்லை. இந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றால் அது நிச்சயம் எங்கள் அணிக்கு மிகவும் பெருமையான விஷயம். ஏனென்றால் இந்திய கேப்டன் எங்களுக்கு எதிராக விளையாடுகிறார்.

இந்தப் போட்டிக்காக நாங்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருந்தோம்.நேற்று இரவு 10 மணிக்கு தூங்கி காலை 7 மணிக்கு எழுந்து விட்டேன். எந்த ஒரு பரபரப்பும் இல்லாமல் ரிலாக்ஸ் ஆக இருக்க முயற்சி செய்தேன்.ரோகித் சர்மாவின் விக்கெட் நிச்சயமாக என் வாழ்நாளில் நான் எடுத்தது பெரிய விக்கெட்.

எனினும் ஒரு நல்ல பந்து எப்போதுமே ஒரு நல்ல பந்து தான். அது எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும் அவர்களுடைய விக்கெட்டை அது எடுத்து விடும் என்று உமர் நசீர் தெரிவித்துள்ளார். இதுவரை 57 முதல் தரப் போட்டிகளில் விளையாடிய உமர் நசீர் மொத்தமாக 138 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். இதில் அவருடைய பந்துவீச்சு சராசரி 29 என்று அளவில் இருக்கின்றது.

Story first published: Thursday, January 23, 2025, 21:36 [IST]
Other articles published on Jan 23, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+