Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Hey! Everybody.. ரஞ்சி போட்டியில் ரிஷப் பண்டும் சொதப்பல்.. கருண் நாயர் நிதான ஆட்டம்

டெல்லி : முதல்வன் திரைப்படத்தில் ஒரு நாள் முதலமைச்சராக பதவியேற்கும் அர்ஜுன் பெண்கள் ஈவ்டீசிங் வழக்கில் நடவடிக்கை எடுக்காத அனைவரையும் பதவியில் இருந்து தூக்குவார். அப்போது இந்த வழக்கில் பலரும் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதை அறிந்த அர்ஜூன், Hey, Everybody என ஆக்ரோஷமாக அதிர்ச்சியாக சொல்வார்.

அப்படித்தான் இன்று கிரிக்கெட் ரசிகர்கள் மாறி இருக்கிறார்கள். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஏன் தடுமாறுகிறது என்பதற்கு இன்று ரஞ்சி கோப்பை ஒரு நல்ல பதிலை கொடுத்திருக்கிறது. இந்திய அணியின் ஸ்டார் வீரர்களான ரோகித் சர்மா,ஜெய்ஸ்வால் கில் போன்ற வீரர்கள் இன்று ரஞ்சி போட்டியில் தடுமாறினர்.

ranji trophy rishabh pant rohit sharma karun nair

இந்த மூன்று வீரர்களுமே 10 ரன்களை கூட தொடாமல் ஆட்டம் இழந்தனர். இதை போன்று இந்தியாவின் டெஸ்ட் கிரிக்கெட்டில் நன்றாக விளையாடும் பண்ட் கூட இன்று ரஞ்சி கிரிக்கெட்டில் தடுமாறியுள்ளார். சௌராஷ்டிரா அணிக்கு எதிராக டெல்லி அணியில் பண்ட் இடம் பெற்றார். ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு ரஞ்சி போட்டிக்கு திரும்பி உள்ள ரிஷப் பண்ட் இன்று 10 பந்துகளை எதிர் கொண்டு வெறும் ஒரு ரன் மட்டுமே எடுத்து டிஏ ஜடேஜா பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார்.

இதில் முன்னாள் அண்டர் 19 கேப்டன் யாஷ் தூல் 44 ரன்களும் ஆயுஷ் பதோனி அரை சதம் எடுத்தும் விளையாட பந்த் ஒரு ரன்னில் வெளியேறி இருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. இதேபோன்று விஜய் ஹசாரே கோப்பையில் 779 ரன்கள் குவித்த கருண் நாயர் மட்டும் ஒரு அளவுக்கு பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விதர்பா அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் எடுத்து தடுமாறி இருக்கிறது. இதில் கருண் நாயர் மட்டும் 80 பந்துகளை எதிர்கொண்டு 39 ரன்கள் சேர்த்த நிலையில் கலீல் அகமது பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். இதில் கலில் அகமத் 13 ஓவர்கள் வீசி 32 ரன்கள் விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். இப்படி ரஞ்சி கோப்பையில் ஸ்டார் வீரர்கள் அனைவரும் தடுமாறி இருப்பது கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. இதில் விராட் கோலி மட்டும் கிரேட் எஸ்கேப் ஆகிவிட்டார் என்று ரசிகர்கள் அவரை கிண்டல் செய்து வருகின்றனர்.

Story first published: Thursday, January 23, 2025, 13:09 [IST]
Other articles published on Jan 23, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+