Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரஞ்சி கோப்பை: சிஎஸ்கே பவுலர் 5 விக்கெட் வீழ்த்தி அபார பந்துவீச்சு.. பேட்டிங்கிலும் கலக்கிய CSK வீரர்

மும்பை : ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் இரண்டாவது பகுதி கடந்த ஜனவரி 23ஆம் தேதி தொடங்கியது. இதில் சுப்மன் கில், ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், ஜடேஜா போன்ற ஸ்டார் வீரர்கள் திரும்பியதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் இந்த போட்டிகள் தற்போது முடிவடைந்து இருக்கிறது. இதில் என்ன நடந்திருக்கிறது என்று தற்போது பார்க்கலாம். இதில் பரோடா அணிக்கு 617 ரன்கள் என்ற இலக்கை மகாராஷ்டிரா அணி நிர்ணயித்தது.

Ranji trophy TN vs Chandigarh Mukesh choudary Vijay shankar

இரண்டாவது இன்னிங்ஸில் சிஎஸ்கே பவுலர் முகேஷ் சௌந்தரி அபாரமாக பந்துவீசி ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன் மூலம் பரோடா அணி 177 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் ஒரு இன்னிங்ஸ் மட்டும் 439 ரன்கள் வித்தியாசத்தில் மகாராஷ்டிரா அணி வெற்றி பெற்றது.

இதேபோன்று காஷ்மீர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி தோல்வியை தழுவியது. மற்றொரு லீக் ஆட்டத்தில் சண்டீகர் அணியை எதிர்கொண்ட தமிழ்நாடு அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் தமிழக அணியில் இடம்பெற்ற சிஎஸ்கே நட்சத்திர வீரர் விஜய் சங்கர் இரண்டாவது இன்னிங்சில் 150 ரன்கள் குவித்தார்.

இதேபோன்று ராஜஸ்தான் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் விதர்பா அணி 221 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த நிலையில் மத்திய பிரதேச அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கேரளா அணி முதல் இன்னிங்ஸ் முன்னிலை பெற்றதை வைத்து புள்ளிகளை பெற்றது. இதேபோன்று பெங்கால் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஹரியானா 283 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மற்றொரு லீக் ஆட்டத்தில் பீகார் அணிக்கு எதிரான போட்டியில் உத்தர பிரதேச அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 119 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் உத்திரபிரதேச அணி 2 விக்கெட் இழப்பிற்கு 603 ரன்கள் குவித்தது. ஆரியன் ஜோயல் 200 ரன்களும், அபிஷேக் கவுஸ்வாமி 198 ரன்களும், கரண் சர்மா சதம் அடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, January 26, 2025, 20:02 [IST]
Other articles published on Jan 26, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+