Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பும்ரா விளையாட வந்தா போதும்... இந்தியாவோட நிலை டோட்டலா மாறிடும்... ரன்வீர் சிங் நம்பிக்கை

மும்பை : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 3 டி20 போட்டிகள் நடந்து முடிந்துள்ளன.

இதில் இங்கிலாந்து அணி 2க்கு 1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் விடுப்பில் உள்ள பௌலர் பும்ரா மீண்டும் அணிக்கு திரும்பினால் நிலைமை இந்தியாவிற்கு சாதகமாக மாறிவிடும் என்று பாலிவுட் ஸ்டார் ரன்வீர் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பும்ரா திருமணம்

பும்ரா திருமணம்

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடரின் இறுதிபோட்டியில் விளையாடாமல் தன்னுடைய திருமணத்திற்காக விடுப்பு எடுத்து சென்றார் பௌலர் ஜஸ்பிரித் பும்ரா. இரு தினங்களுக்கு முன்பு அவருக்கு கோவாவில் திருமணம் நடைபெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான குறைந்த ஓவர்களை போட்டிகளில் அவர் பங்கேற்க மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது.

இங்கிலாந்து முன்னிலை

இங்கிலாந்து முன்னிலை

தற்போது நடைபெற்றுவரும் டி20 தொடரின் 3 போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் இங்கிலாந்து 2க்கு 1 என்ற கணக்கில் வெற்றி பெற்று முன்னிலை வகித்து வருகிறது. நேற்றைய 3வது போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை இங்கிலாந்து வெற்றி கொண்டுள்ளது.

அணியின் கதை மாறும்

அணியின் கதை மாறும்

இந்நிலையில் ஜஸ்பிரித் பும்ரா மீண்டும் அணியில் இணைந்தால் அப்போது கதையே மாறிவிடும் என்றும் இந்தியாவிற்கு சாதகமாக நிலைமை மாறிவிடும் என்றும் பாலிவுட் நடிகர் ரன்வீர் கபூர் தெரிவித்துள்ளார். சிறப்பான கிரிக்கெட் ரசிகராக ரன்வீர் சிங் காணப்படுகிறார். கடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடர் வெற்றியின்போதும் இவர் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

ரசிகர்கள் ஏமாற்றம்

ரசிகர்கள் ஏமாற்றம்

கடந்த டெஸ்ட் போட்டியில் முதல் போட்டியில் மட்டுமே தோல்வி அடைந்த இந்திய அணி அடுத்தடுத்த சிறப்பான வெற்றிகளை தந்தது. ஆனால் தற்போது டி20 தொடரில் 3 போட்டிகளில் 2ல் தோல்வி அடைந்துள்ளது. இது கிரிக்கெட் ரசிகர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கி வருகிறது.

Story first published: Wednesday, March 17, 2021, 18:13 [IST]
Other articles published on Mar 17, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+