சாதனை படைத்த ரஷித் - ரஹ்மான் கூட்டணி..2வது வெற்றி பெறுமா ஆப்கான்.. சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி ?

ஷார்ஜா: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் வங்கதேச அணி 127 ரன்களில் சுருண்டது.

Recommended Video

IND vs PAK: Manjrekar கேட்ட கேள்வி! Jadeja-வின் செம Reply

டாஸ் வென்று செஸிங் செய்த அணியே, ஷார்ஜா ஆடுகளத்தில் அதிக முறை வென்று இருக்கிறத. ஆனால் கவுண்டமணி ஒரு படத்தில் தலைக்கீழாக தான் குதிப்பேன் என்று கூறுவாரே,

அதே போல் வங்கதேச அணி கேப்டன் ஷகிபுல் ஹசனும், டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து அதிர்ச்சி அளித்தார்.

இந்திய அணி செய்வது பெரும் தவறு.. பாகிஸ்தானுடனான ஆட்டம்.. ரோகித் சர்மா மீது கம்பீர் விளாசல்!இந்திய அணி செய்வது பெரும் தவறு.. பாகிஸ்தானுடனான ஆட்டம்.. ரோகித் சர்மா மீது கம்பீர் விளாசல்!

சொதப்பிய வங்கதேசம்

சொதப்பிய வங்கதேசம்

ஆடுகளம் ரன் குவிப்புக்கு சாதகமாக இருக்கும் என்று கருதி, அதிக ரன்கள் அடித்து ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி தரலாம் என்று கேப்டன் ஷகிபுல் ஹசன் நினைத்தார். ஆனால் ஷகிபுல் ஹசனுக்கு வங்கதேச அணி பேட்ஸ்மேன்களே அதிர்ச்சி வைத்தியம் அளித்தனர். ஆப்கானிஸ்தான் வீரர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் வந்த வேகத்தில் பெவிலியன் நோக்கி சென்றனர்.

28 ரன்களில் 4 விக்கெட்

28 ரன்களில் 4 விக்கெட்

தொடக்க வீரர் முகமது நயிம் 6 ரன்களிலும், அனாமுல் ஹக் 5 ரன்களிலும், கேப்டன் ஷகிபுல் ஹசன் 11 ரன்களிலும், முஸ்பிசுர் ரஹிம் 1 ரன்னிலும் ஆட்டமிழக்க, வங்கதேச அணி 28 ரன்களை சேர்ப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து மகமுல்லா மற்றும் மொஸ்தேக் ஹூசைன் நிதானமாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்க முயற்சித்தனர்.

127 ரன்களில் சுருண்டது

127 ரன்களில் சுருண்டது

எனினும் மகமுல்லா 25 ரன்கள் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். மொஸ்தேக் ஹூசைன் மட்டும் 48 ரன்கள் குவிக்க, 20 ஓவர் முடிவில் வங்கதேச அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டு இழப்பிற்கு 127 ரன்கள் எடுத்தது. இந்தப் போட்டியில் முஜிபுர் ரஹ்மான் 4 ஓவர் வீசி 16 ரன்களை விட்ட கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

சாதனை

சாதனை

இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 200 விக்கெட்டுகளை வீழ்த்திய 2வத வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இதே போன்று ரஷித் கான் 4 ஓவர் வீசி 22 ரன்கள் விட்டு கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் 2வது இடத்தை ரஷித் கான் பிடித்தார். தற்போது 128 ரன்களை துரத்தும் ஆப்கானிஸ்தான் அணி பவர்பிளே முடிவில் 29 ரன்களுக்கு 1 விக்கெட் இழந்து விளையாடி வருகிறது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Rashid Khan and Mujeeb ur Rahman creates record restricted Bangladesh to low score சாதனை படைத்த ரஷித் - ரஹ்மான் கூட்டணி..2வது வெற்றி பெறுமா ஆப்கான்.. சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி ?
Story first published: Tuesday, August 30, 2022, 22:37 [IST]
Other articles published on Aug 30, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X