Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எங்களுக்கு அவர்தான் வேண்டும்.. சண்டை போடும் அணிகள்.. ஐபிஎல்லின் மோஸ்ட் வான்டட் வீரர்!

சென்னை: இந்த வருடத்திற்கான ஐபிஎல் 'நெருப்பு' இப்போதே எரிய தொடங்கிவிட்டது. எந்த வீரர் எந்த அணிக்கு செல்வார் என்ற எதிர்பார்ப்பு இப்போதே அதிகமாக இருக்கிறது.

இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் வேண்டும் என்று எல்லா அணிகளும் உரிமை கோரியுள்ளது. எந்த அணியால் இவர் ஏலம் எடுக்கப்படுவார் என்று எதிர்பார்ப்பு அதிகம் ஆகி இருக்கிறது.

சென்ற வருடம் முழுக்க கிரிக்கெட் போட்டியில் இவர் ஆடிய தாண்டவம் எல்லா நாட்டு ரசிகர்களையும் வாய் பிளக்க வைத்தது.

ஏலம்

ஏலம்

ஐபிஎல் ஏலம் வரும் 27 மற்றும் 28ம் தேதிகளில் நடக்க உள்ளது. எப்போதும் போல இந்த வருடமும் ஏலம் பெங்களூரில் நடக்கும். அணிகளின் பட்ஜெட் 80 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே சில வீரர்கள் ரிட்டென்ஷன் மூலம் அணிக்கு தேர்வாகி உள்ளனர்.

ரஷீத்

ரஷீத்

இதில் ரஷீத் கான் ஏலம் மிகவும் அதிகமாக எதிர்பார்க்கப்படுகிறது. இவர் 2017ல் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக வெறும் 18 ரன்கள் கொடுத்து 7 விக்கெட் எடுத்தார். அதேபோல் சென்ற வருடம் ஐசிசி மிக முக்கியமான வீரர்களின் பட்டியலில் இவரை வைத்து இருந்தது. இவருக்கு 19 வயதே நிரம்பியுள்ளது.

சென்ற ஐபிஎல்

சென்ற ஐபிஎல்

இவரை சன்ரைசர்ஸ் அணி 4 கோடி கொடுத்து வாங்கியது. ஒரு ஆப்கான் வீரர் இவ்வளவு விலைக்கு ஏலம் போனது அதுவே முதல்முறை ஆகும். 32 ஐசிசி ஒருநாள் போட்டிகளில் விளையாடிய இவர் 112 விக்கெட்டுகள் எடுத்து பெரிய சாதனை செய்துள்ளார்.

கெத்து

தற்போது ஆஸ்திரேலியாவில் நடக்கும் பிக் பாஷ் போட்டியிலும் இவர் கெத்து காட்டிக் கொண்டு இருக்கிறார். தற்போது இவர் அடிலெய்ட் அணிக்காக விளையாடி வருகிறார். சிட்னி தண்டருக்கு எதிராக இவர் பிடித்த கேட்ச் இப்போதும் வைரலாக இருக்கிறது.

பினிஷர்

இந்திய அணிக்கு எப்படி டோணியோ அப்படித்தான் இவர் ஆப்கானிஸ்தான் அணிக்கும். அந்த அணியின் சிறந்த பினிஷர் இவர்தான். தற்போது பிக் பாஷ் போட்டியிலும் இவர்தான் சிறந்த பினிஷராக இருக்கிறார். இவர் சிறந்த ஆல்ரவுன்டரும் கூட.

Story first published: Thursday, January 11, 2018, 15:13 [IST]
Other articles published on Jan 11, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+