வெறும் 19 வயது.. 8 அணிகளையும் பின்னால் வர வைத்த ஆப்கான் வீரர்!
சென்னை: இந்த வருடத்திற்கான ஐபிஎல் 'நெருப்பு' இப்போதே எரிய தொடங்கிவிட்டது. எந்த வீரர் எந்த அணிக்கு செல்வார் என்ற எதிர்பார்ப்பு இந்த ஏலத்தில் மிக அதிகமாக இருக்கிறது.
இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் வேண்டும் மீண்டும் ஹைதராபாத் அணிக்கு சென்று இருக்கிறார். ஏற்கனவே அவருக்கு எல்லா அணிகளும் உரிமை கோரியுள்ளது.
அதுவும் கஷ்டப்பட்டு ஆர்டிஎம்மை பயன்படுத்தி அவரை மீண்டும் அணியில் எடுத்து உள்ளது ஹைதராபாத் அணி.

யார் இவர்
ரஷீத் கான் ஆப்கான் ஆல்ரவுண்டர். இவருக்கு 19 வயது மட்டுமே ஆகிறது. சென்ற வருடம் இவர் 2017ல் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக வெறும் 18 ரன்கள் கொடுத்து 7 விக்கெட் எடுத்தார். அதேபோல் சென்ற வருடம் ஐசிசி மிக முக்கியமான வீரர்களின் பட்டியலில் இவரை வைத்து இருந்தது.
விருது வாங்கினார்
இவர் ஐசிசியின் சிறந்த இணை வீரர் விருது வாங்கி உள்ளார். ஆப்கானிஸ்தானின் 'குட்டி புலி' என்று அழைக்கப்படுகிறார் இவர். சென்ற வருடம் இவர் 60 விக்கெட்டுகள் எடுத்து இருக்கிறார். 43 விக்கெட்டுகளை ஒருநாள் போட்டியில் எடுத்து இருக்கிறார் இந்த ஆல் ரவுண்டர்.

ஐபிஎல்
சென்ற வருடம் இவரை சன்ரைசர்ஸ் அணி 4 கோடி கொடுத்து வாங்கியது. ஒரு ஆப்கான் வீரர் இவ்வளவு விலைக்கு ஏலம் போனது அதுவே முதல்முறை ஆகும். 32 ஐசிசி ஒருநாள் போட்டிகளில் விளையாடிய இவர் 112 விக்கெட்டுகள் எடுத்து பெரிய சாதனை செய்துள்ளார்.

சாதனை
தற்போது மீண்டும் இவர் சாதனை படைத்து இருக்கிறார். இவரை ஹைதராபாத் அணி 9 கோடி கொடுத்து எடுத்துள்ளது. அனைத்து அணிகளும் இவருக்கு போட்டியிட்ட நிலையில் ஆர்டிஎம் மூலம் இவர் எடுக்கப்பட்டு இருக்கிறார்.


Click it and Unblock the Notifications