Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வன்ம வாதியாக மாறிய யுவராஜ்.. இவ்வளவு பொறாமை இருக்க கூடாது.. அஸ்வினை திட்டியதற்கு இதான் காரணம்?

இந்தூர் : தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வினை முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கடுமையாக விமர்சித்து பேட்டி கொடுத்திருப்பது தமிழக ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.

அஸ்வினுக்கு போதிய திறமை கிடையாது என்றும் அவர் எதுக்கு தான் அணியில் தேர்வு செய்யப்படுகிறார் என்று தெரியவில்லை என்று யுவராஜ் சிங் அஸ்வினை கடுமையாக சாடிருக்கிறார்.

Rason behind Yuvraj singh rants against R Ashwin

மேலும் அஸ்வினுக்கு பில்டிங் செய்ய தெரியாது என்றும் அவர் குறை கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே கும்ப்ளேவுக்கு பிறகு அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்றால் அது அஸ்வின் தான். இதுதான் தற்போது யுவராஜ் சிங் போன்ற வீரர்களுக்கு கண்ணை உறுத்துகிறது. கும்ப்ளேவுக்கு பிறகு அதிக விக்கெட்களை வீழ்த்தியவர்கள் பட்டியலில் கபில்தேவ் மற்றும் ஹர்பஜன்சிங் ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தார்கள்.

இவர்கள் இருவரின் சாதனையும் அஸ்வின் முறியடித்து விட்டார். இதனால் கடுப்பான யுவராஜ் சிங் அப்போதிலிருந்து அஸ்வின் மீது வன்மவாதியாகவே இருக்கிறார். தனது நண்பர் ஹரபஜன் சிங் ரெக்கார்டை அஸ்வின் முறியடித்துவிட்டார் என்பதை கொஞ்சம் கூட பொறுக்க முடியாமல் கம்பீரின் ஜெராக்ஸ் போலவே யுவராஜ் சிங் நடந்து வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் இந்திய அணியில் இடம் கிடைக்க வேண்டும் என யுவராஜ் சிங் கடுமையாக போராடியும் அவரால் இறுதிக்கட்டத்தில் எதையுமே செய்ய முடியவில்லை. ஆனால் அஸ்வின் தன்னுடைய திறமை மற்றும் உழைப்பினால் 2023 உலக கோப்பையை கூட விளையாடிவிட்டார். தங்களால் இது போல் முடியவில்லை என்ற கோபத்தையே யுவராஜ் சிங் தற்போது காட்டியிருக்கிறார்.

மேலும் என்ன காரணமோ தெரியவில்லை யுவராஜ் சிங் தற்போது முன்பு போல் இல்லாமல் பல தேவையில்லாத கருத்துக்களை கூறி வருகிறார். அவருக்கு மனதளவில் ஏதோ நெருக்கடி ஏற்பட்டிருப்பது அவருடைய உடல் மொழியை பார்த்தாலே தெரிகிறது. அஸ்வின் எங்கே கும்ப்ளேவின் சாதனையை உடைத்து விடக்கூடாது என்பதற்காக தற்போது இதுபோல் அவருடைய உத்வேகத்தை குலைக்கும் விதமாக யுவராஜ் சிங் பேசி வருகிறார். எனினும் இதுக்கு அஸ்வின் தக்க பதிலடி கொடுப்பார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Story first published: Sunday, January 14, 2024, 20:55 [IST]
Other articles published on Jan 14, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+