Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விட்ட இடத்தைப் பிடித்த மும்பை.. "இந்தா வச்சுக்கோ" என்று ரோஹித்க்கு வெற்றியை பரிசளித்த பொல்லார்ட்

அபுதாபி: பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது

ஐபிஎல் 2021 தொடரில், இன்று (செப்.28) டபுள் ஹெட்டர்ஸ் ஆட்டங்கள் நடைபெற்றது. இதில், இரண்டாவது போட்டியில், மும்பை - பஞ்சாப் அணிகள் விளையாடின.

இதில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, சுமாராக பேட்டிங் செய்து, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்கள் மட்டும் எடுத்தது.

 ஏமாந்த ராகுல்

ஏமாந்த ராகுல்

பஞ்சாப் அணியில் காயம் காரணமாக மாயங்க் அகர்வால் அணியில் இருந்து விலகியிருக்க, அவருக்கு பதில் மன்தீப் சிங்குக்கு வாய்ப்பு கிடைத்தது. எனினும், அவர் க்ருனால் பாண்ட்யா ஓவரில் 14 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து எல்பிடபிள்யூ ஆனார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட க்றிஸ் கெயில் வெறும் 1 ரன்னில், பொல்லார்ட் ஓவரில் கேட்ச் கொடுத்து பெரும் ஏமாற்றம் அளித்தார். இதன் பிறகு, கேப்டன் லோகேஷ் ராகுல் 21 ரன்களில் பொல்லார்டின் அதே ஓவரில் ஷார்ட் பிட்ச் பந்தில் கேட்ச்சாகி வெளியேறினார். இந்த ஒரே ஓவரில், பஞ்சாப் அணியின் அஸ்திவாரத்தையே நாசம் செய்துவிட்டார். இதில் எய்டன் மார்க்ரம் ஓரளவு சிறப்பாக விளையாடி, 29 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். நிகோலஸ் பூரன் 2 ரன்களிலும், தீபக் ஹூடா 28 ரன்களும் எடுக்க, 6 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்கள் மட்டும் எடுத்தது பஞ்சாப்.

 சூர்யகுமார் ஏமாற்றம்

சூர்யகுமார் ஏமாற்றம்

இதன் பிறகு களமிறங்கிய மும்பை அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்துள்ளது. ஸ்பின்னர் ரவி பிஷ்னாய் ஓவரில், 8 ரன்களில் கேட்ச் கொடுத்து ரோஹித் ஷர்மா அவுட்டானார். இதற்கு அடுத்த பந்திலேயே, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் ரன் ஏதும் எடுக்காமல், ஸ்டெம்ப்புகள் சிதற வெளியேறினார். பஞ்சாப் அணி ஒரே ஓவரில், கெயில், ராகுல் விக்கெட்டை இழந்தது போல, மும்பை அணி ஒரே ஓவரில் ரோஹித், சூர்யகுமார் யாதவ் விக்கெட்டுகளை இழந்தது.

 மும்பை வெற்றி

மும்பை வெற்றி

இதன் பிறகு களமிறங்கிய சவுரப் திவாரி, டி காக்குடன் இணைந்து சிறப்பாக பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடினார். அவர் 37 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து அவுட்டானார். பிறகு ஹர்திக் பாண்ட்யா இறுதிவரை களத்தில் இருந்து 30 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து, இறுதிவரை களத்தில் இருந்து மும்பை அணியின் முதல் வெற்றியை பதிவு செய்தார். முடிவில், மும்பை அணி 19 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் அடித்து வெற்றிப் பெற்றது.

 மும்பை தீவிரம்

மும்பை தீவிரம்

ஐபிஎல் 2021 தொடரில், சென்னை, டெல்லி அணிகள் ஏறக்குறைய தங்களது பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துள்ள நிலையில், மூன்றாவது அணியாக பெங்களூரு ஓரளவு வலிமையாக பிளே ஆஃப் நுழைய ரெடியாகி வருகிறது. இந்த நான்காவது இடத்திற்கு தான் கடும் போட்டி நிலவுகிறது. கொல்கத்தா, ராஜஸ்தான், மும்பை மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகள், 8 புள்ளிகளுடன் தொடர்ந்து பிளே ஆஃப் ரேஸில் நுழைய தீவிரமாக இருந்தன. இந்நிலையில், இன்றைய வெற்றியின் மூலம், 11வது போட்டியில் விளையாடி 5வந்து வெற்றியை மும்பை பதிவு செய்த நிலையில், 10 புள்ளிகளுடன் 5ம் இடத்துக்கு முன்னேறியது. அதேசமயம், 7வது தோல்வியை பதிவு செய்த பஞ்சாப், புள்ளிப்பட்டியலில் 6வது இடத்துக்கு பின்தங்கியது.

Story first published: Tuesday, September 28, 2021, 23:32 [IST]
Other articles published on Sep 28, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+