For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரவி சாஸ்திரி நீங்க என்ன சொன்னாலும் “ஆமாம் சாமி” போடுவாராமே? இதுக்கு கோலி என்ன சொன்னாருன்னு தெரியுமா?

Recommended Video

ரவி சாஸ்திரி பற்றி கோலி என்ன சொன்னாருன்னு தெரியுமா?- வீடியோ

மும்பை : தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் இரண்டு தூண்களாக இருப்பவர்கள் கோலியும், ரவி சாஸ்திரியும்.

இவர்கள் சொல்வது தான் அணியில் நடக்கும் என்ற நிலை இருக்கிறது. இவர்கள் இருவருக்கும் முடிவுகள் எடுப்பதில் ஒற்றுப் போகிறது.

சிலர், கோலி எடுக்கும் முடிவுகள் அனைத்திற்கும் ரவி சாஸ்திரி "ஆமாம்" போடுகிறார் என கூறுகிறார்கள். இந்த சந்தேகத்தை செய்தியாளர் ஒருவர் நேரடியாக கோலியிடமே கேட்டு விட்டார்.

இது தான் வினோதமான விஷயம்

இது தான் வினோதமான விஷயம்

இதை கேள்விக்கு பதில் அளித்த கோலி, "நான் கேட்டதிலேயே இது தான் வினோதமான விஷயம். இந்திய கிரிக்கெட்டில் ரவி சாஸ்திரியை விட அதிகம் "இல்லை" என மறுத்தவர்கள் இல்லை என்றே நினைக்கிறேன். இவர் ஒருவரிடம் தான் நான் பேசி உண்மையான கருத்தை அறிய முடியும். இவரது பேச்சை கேட்டு என் ஆட்டத்தில் நான் நிறைய மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறேன்" என கூறினார்.

உதவினார் ரவி சாஸ்திரி

உதவினார் ரவி சாஸ்திரி

மேலும் ரவி சாஸ்திரியை பற்றி பேசிய கோலி, "இவர் வீரர்களிடம் இருந்து சிறப்பான ஆட்டத்தை எடுத்து வந்துவிடுவார். நான் 2014 இங்கிலாந்து தொடரில் மோசமாக ஆடிய பின்பும், ஷிகர் தவானுக்கு 2015 உலகக்கோப்பைக்கு பின்பும் மீண்டு வர உதவியுள்ளார்" என புகழ்ந்தார் கோலி.

ஆஸ்திரேலியா தொடர் செல்லும் இந்தியா

ஆஸ்திரேலியா தொடர் செல்லும் இந்தியா

இந்த கேள்வி - பதில் சம்பவம் இந்தியா அடுத்து பங்கேற்கவுள்ள ஆஸ்திரேலியா தொடர் பற்றி நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் நடந்தது. ஆஸ்திரேலியா செல்லும் இந்தியா டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் பங்கேற்க உள்ளது.

இதற்கு முன்பு கிடைத்த தோல்விகள்

இதற்கு முன்பு கிடைத்த தோல்விகள்

இதற்கு முன்பு நடந்த தென்னாபிரிக்கா மற்றும் இங்கிலாந்து தொடர்களில் இந்தியா தோல்விகளை சந்தித்தது. இந்தியா வெளிநாடுகளில் வெற்றிகள் பெற தவறி வருவது மீண்டும் தொடர்கிறது என வரும் விமர்சனங்களை உடைக்கும் வகையில் இந்தியா ஆஸ்திரேலியாவில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

சிறந்த வாய்ப்பு இது

சிறந்த வாய்ப்பு இது

ஸ்மித், வார்னர் இல்லாத ஆஸ்திரேலியா வலுவிழந்து உள்ளதால் இந்தியா எளிதாக வெல்லும் என கணிக்கப்பட்டு உள்ளது. இது பற்றி கங்குலி கருத்து தெரிவித்து இருந்தார். அவர் இந்தியாவுக்கு இதை விட சிறந்த வாய்ப்பு கிடைக்காது என கூறி இருந்தார்.

கங்குலியின் கருத்தை பற்றி இங்கே கிளிக் செய்து படிக்கலாம்.

Story first published: Friday, November 16, 2018, 15:16 [IST]
Other articles published on Nov 16, 2018
English summary
Ravi Shasthri a yes man to Kohli? Captain Kohli answered this “bizzare” question.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+