For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஸ்மித், வார்னர் இல்லை.. செம வாய்ப்பு.. ஆஸி. வை வச்சு செஞ்சுட்டு வந்துரணும்.. “ஏத்தி” விடும் கங்குலி

Recommended Video

ஸ்மித் - வார்னர் இல்லை, ஆஸி. வை வெல்லலாம்: கங்குலி அறிவுரை- வீடியோ

கொல்கத்தா : இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி ஆஸ்திரேலியா தொடரில் இந்தியா வெற்றி பெற நல்ல வாய்ப்பு கிடைத்திருப்பதாக கூறி இருக்கிறார்.

ஆஸ்திரேலிய அணியில் முக்கிய வீரர்களான ஸ்மித் மற்றும் வார்னர் தடைக் காலத்தில் இருக்கிறார்கள்.

அவர்கள் இல்லாத நிலையில், இந்தியா ஆஸ்திரேலியாவை வீழ்த்த நல்ல வாய்ப்பு கிடைத்திருப்பதாக கங்குலி கூறியுள்ளார்.

சிம்ம சொப்பனமாக விளங்கிய காலம்

சிம்ம சொப்பனமாக விளங்கிய காலம்

சில வருடங்கள் முன்பு இருந்தே ஆஸ்திரேலிய கிரிக்கெட் தனது பழைய சிறப்புகளை இழந்து, வெற்றி தோல்விகளை மாறி, மாறி சந்தித்து வந்தது. 90களில் ஸ்டீவ் வாஹ் தலைமையிலான அணியும், 2000-த்தில் ரிக்கி பாண்டிங் தலைமையிலான அணியும் எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கின.

சகாப்தம் முடிவுக்கு வந்தது

சகாப்தம் முடிவுக்கு வந்தது

அடுத்து வந்த மைக்கேல் கிளார்க் காலத்தில் வெற்றி, தோல்விகள் மாறி மாறி வந்தன. அடுத்து ஸ்டீவ் ஸ்மித் காலத்தில் அணி அதன் பொலிவை இழந்தது. பந்து சேத விவகாரத்தில் ஸ்மித், வார்னர் சிக்கிய காலத்தோடு ஆஸ்திரேலிய கிரிக்கெட் சகாப்தம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது.

தோல்விகள் மட்டுமே

தோல்விகள் மட்டுமே

ஸ்மித் வார்னர் தடைக் காலத்தில் இருக்கும் நிலையில் ஆஸ்திரேலிய அணி கடந்த சில மாதங்களாக வெறும் தோல்விகளை மட்டுமே சந்தித்து வருகிறது. ஒரு வெற்றி பெற்றால் கூட பெரிய வெற்றி போல கொண்டாட வேண்டிய பரிதாப நிலையில் இருக்கிறது ஆஸ்திரேலியா.

சரியான வாய்ப்பு

சரியான வாய்ப்பு

இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணி இன்னும் சில தினங்களில் ஆஸ்திரேலியா செல்ல உள்ளது. அங்கே டெஸ்ட், ஒருநாள் போட்டிகள் உள்ளிட்ட கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்கிறது. இது பற்றி பேசிய கங்குலி, "ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித், வார்னர் இல்லை. இது இந்திய அணியில் கோலி, ரோஹித் இல்லாமல் இருந்தால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு நிலை. இந்திய கிரிக்கெட்டுக்கு இது சரியான தருணம். இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஆஸ்திரேலியாவை இந்தியா வீழ்த்த வேண்டும்' என கூறினார்.

பழி தீர்த்துக் கொள்ளலாம்

பழி தீர்த்துக் கொள்ளலாம்

இந்தியா முன்னதாக இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்கா டெஸ்ட் தொடர்களில் படு மோசமாக ஆடியது. தொடர்களை அங்கே இழந்தது. இந்த நிலையில், கங்குலி சொத்தையாக இருக்கும் ஆஸ்திரேலியாவை "வச்சு செஞ்சு" மற்ற வெளிநாட்டு தோல்விகளுக்கு பழி தீர்த்துக் கொள்ளலாம் எனவும், இதற்கு முன் வலுவான ஆஸ்திரேலியா, இந்தியாவை புரட்டி எடுத்த காலங்களுக்கு இப்போது பதிலடி கொடுக்கலாம் எனவும் கூறுவது போல உள்ளது. ஐயா கங்குலி.. எங்கேயோ போயிட்டீங்க!! சொத்தை டீமை ஜெயிக்கிறதுல என்னய்யா பெருமை இருக்கு..

Story first published: Thursday, November 15, 2018, 18:10 [IST]
Other articles published on Nov 15, 2018
English summary
Ganguly says this is the best chance to beat Australia as Smith and Warner not playing
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X