IND vs ENG Semi Final LIVE: இந்திய அணி வெற்றி.. பைனலுக்கு தகுதி
மும்பை: 2026 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி சுற்றில் இந்திய அணி இன்று இங்கிலாந்தை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 253 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி. இங்கிலாந்து 20 ஓவர் முடிவில் 246 ரன்கள் எடுத்தது

இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி. இங்கிலாந்து 20 ஓவர் முடிவில் 246 ரன்கள் எடுத்தது
பெத்தேல் அதிரடியாக ஆடிஅரைசதம் கடந்தார். 12 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்துள்ளது.
5 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்கள் எடுத்துள்ளது. ஜோஸ் பட்லர், பெத்தேல் களத்தில் உள்ளனர்.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 253 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து அணிக்கு 254 ரன்கள் என்ற சவாலான இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
திலக் வர்மா 7 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 19 ஓவர்களில் இந்தியா 237 ரன்களுக்கு 6 விக்கெட் இழந்துள்ளது.
சிவம் துபே 25 பந்துகளில் 43 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். இந்தியா 18 ஓவர்களில் 217 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து உள்ளது.
சஞ்சு சாம்சன் 42 பந்துகளில் 89 ரன்கள் குவித்து ஆட்டமிழப்பு இந்திய அணி 13.1 ஓவரில் 160/3
26 பந்துகளில் சஞ்சு சாம்சன் அரைசதம்
இந்திய அணியின் அபிஷேக் சர்மா 9 ரன்களில் ஆட்டமிழப்பு
இங்கிலாந்து அணி பிளேயிங் 11: ஃபில் சால்ட், ஜோஸ் பட்லர், ஹாரி புரூக் (கேப்டன்), ஜேக்கப் பெத்தேல், டாம் பான்டன், சாம் கர்ரன், வில் ஜாக்ஸ், ஜேமி ஓவர்டன், லியாம் டாசன், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித்.
இந்திய அணி பிளேயிங் 11: அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் பட்டேல், அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா.
2026 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி சுற்றில் இந்திய அணி இன்று இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
டி20 உலககோப்பை வரலாற்றில் இரு அணிகளும் 5 முறை மோதியுள்ளன. இதில் இங்கிலாந்து அணி 3 முறையும், இந்திய அணி 2 முறையும் வென்றுள்ளது.
தொடர்ந்து மூன்றாவது முறையாக இரு அணிகளும் அரையிறுதி சுற்றில் மோதுகின்றனர். 2022 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி வென்ற நிலையில், 2024 ஆம் ஆண்டு இந்தியா அரை இறுதியில் வெற்றி பெற்றது


Click it and Unblock the Notifications