Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உங்க மேல கொஞ்சம் கூட சந்தேகம் இல்ல.. ஸ்ரேயாஸ், இசான் கிஷனுக்கு ரவி சாஸ்த்ரி அறிவுரை

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்டார் வீரர்களாக கருதப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இசான் கிஷன் ஆகியோருக்கு பிசிசிஐ ஊதிய ஒப்பந்தத்தில் இருந்து அதிரடியாக நீக்கி இருக்கிறது. இது இரு வீரர்களுக்கும் மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ஒட்டுமொத்த ரசிகர்களும் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இசான் கிஷன் கிண்டல் செய்து வருகிறார்கள். இவ்விரு வீரர்களையும் இனி இந்திய அணியில் சேர்க்கக்கூடாது என்றெல்லாம் பேசி வருகிறார்கள். ஆனால் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வீரர்களுக்கும் நம்பிக்கை அளிக்கும் வகையில் சில கருத்துக்களை வெளியிட்டு இருக்கிறார்.

 Ravi shastri advices shreyas iyer and ishan kishan to come back stronger

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கிரிக்கெட் போன்ற விளையாட்டில் நாம் எவ்வாறு திரும்பி கம் பேக் கொடுக்கிறோம் என்பதில்தான் வெற்றியே இருக்கிறது. ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இசான் கிஷன் இருவரும் கவலைப்படக்கூடாது. கடுமையாக இனி உழையுங்கள். சவால்களை எதிர்கொள்ளுங்கள்.

மீண்டும் பலமான வீரராக கம்பேக் கொடுங்கள். நீங்கள் இருவரும் எவ்வளவு திறமைசாலிகள், என்ன சாதனைகளை படைத்திருக்கிறீர்கள் என்பது அனைவருக்குமே தெரியும். எனவே எனக்கு கொஞ்சம் கூட உங்கள் மீது சந்தேகமில்லை. நீங்கள் மீண்டும் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்துவீர்கள் என்று ரவி சாஸ்திரி அறிவுரை வழங்கி இருக்கிறார். ஸ்ரேயாஸ் கடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 530 ரன்கள் அடித்திருந்தார்.

மேலும் பல முக்கியமான ஆட்டத்தில் இந்திய அணிக்காக சுயநலம் இன்றி விளையாடினார். எனினும் அவருக்கு முதுகு வலி பிரச்சனை இருப்பதால்தான் அவர் ரஞ்சிப் போட்டியில் விளையாடவில்லை என்று கூறப்படுகிறது.இந்த நிலையில் மும்பை அணி விளையாடும் அரையிறுதியில் ஸ்ரேயாஸ் திரும்பி அதிரடியாக விளையாடி ரன் குவிக்க வேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஹர்திக் பாண்டியாவுக்கு மட்டும் பிசிசிஐ அனுமதி வழங்கியிருக்கும் போது ஸ்ரேயாஸ் மட்டும் ஏன் இந்த நிலை என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். முன்னாள் பயிற்சியாளர் என்ற முறையில் ரவி சாஸ்திரி இரு வீரர்களுக்கும் நம்பிக்கை அளிக்கும் வகையில் பேசி இருப்பது ரசிகர்கள் மத்தியில் நிகழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Story first published: Thursday, February 29, 2024, 8:01 [IST]
Other articles published on Feb 29, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+