Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அநியாயம் ! இதுக்கு எப்படி அவுட் கொடுத்தீங்க? மூன்றாம் நடுவரை விளாசிய கிரிக்கெட் வர்ணனையாளர்கள்

லண்டன் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்திய அணி வீரர் சுப்மன் கில்லுக்கு அவுட் வழங்கப்பட்டதற்கு ரவி சாஸ்திரி சங்ககாரா உள்ளிட்ட கிரிக்கெட் வர்ணனையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

444 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிகப்பெரிய இலக்குடன் இந்திய வீரர்கள் விளையாடினர். அப்போது ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சை ரோகித் சர்மாவும் கில்லும் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர்.

கில் 19 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 18 ரன்களை சேர்த்தார். அப்போது போலந்து வீசிய பந்தை தில் தொட்ட போது அது ஸ்லீப்பில் கேட்ச் ஆனது. கேமரான் கிரீன் டைவ் அடித்து பந்தை ஒற்றை கையால் பிடிக்கும் போது பந்து தரையில் தெளிவாகப்பட்டது. இதற்கு பல நடுவர்கள் அவுட்டு வழங்காமல் மூன்றாம் நடுவர் உதவியை நாடினார்கள்ம் அப்போது மூன்றாம் நடுவர் பந்திற்கு கீழ் ஃபில்டரின் விரல் இருக்கிறது. அவர் பந்தை சரியான முறையில் பிடித்திருக்கிறார் என்று கூறி சுப்மன் கில்லுக்கு அவுட் வழங்கினார்கள்.

Ravi shastri and sangakara slams third umpire over shubman gill out controversy

இது குறித்து கருத்து தெரிவித்த கிரிக்கெட் வர்ணனையாளர் ரவி சாஸ்திரி பந்தை கேமராவில் பிடிக்கும் போது விரல் பந்துக்கு கீழ் இருப்பதாக மூன்றாம் நடுவர் கூறுகிறார். ஆனால் பந்தின் ஒரு பகுதி தரையில் பட்டதை அவர் ஏன் பார்க்கவில்லை என கேள்வி கேட்டுள்ளார். இதேபோன்று இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சங்ககாராவும் மூன்றாம் நடுவரின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

பந்து பிடித்தார் இல்லையா என்பதை விட பந்து தரையில் பட்டதை ஏன் மூன்றாம் நடுவர் கணக்கிலே எடுத்துக் கொள்ளவில்லை என்று கேள்வி கேட்டுள்ளார். இதற்கு பதில் அளித்துள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பந்துக்கு கீழ் விரல் இருப்பதாகவும் பந்தை அவர் கடைசி வரை விடவில்லை என்பதற்காகவும் மூன்றாம் நடுவர் அவுட் அறிவித்திருக்கிறார். ஆனால் பந்தின் ஒரு பகுதி தரையில் பட்டிருக்கிறது. இது நிச்சயம் சர்ச்சை ஆகும் என்று ரிக்கி பாண்டிங் கூறியிருக்கிறார்.

Story first published: Saturday, June 10, 2023, 20:50 [IST]
Other articles published on Jun 10, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+