For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பார்த்தீங்களா பந்து எப்படி Turn ஆகுது.. ஹைடன் கேட்ட கேள்வி.. ஒரே பதிலில் ஆஃப் செய்த ரவி சாஸ்த்ரி

நாக்பூர் : ஆடுகளம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக செயல்படுவதாக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் எழுப்பிய குற்றச்சாட்டுக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன்களான கவாஸ்கர், ரவி சாஸ்திரி ஆகியோர் தக்க பதிலடி கொடுத்திருக்கிறார்கள்.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் நாளில் மதியம் 2 மணிக்குள்ளே 177 ரன்களில் ஆட்டம் இழந்தது. இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் எடுத்தது.

இதனை அடுத்து இரண்டாவது நாள் ஆட்டத்தை இந்தியா தொடங்கியபோது ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி சதம் அடித்தார் .

வலுவான நிலை

வலுவான நிலை

புஜாரா, விராட் கோலி, சூர்யகுமார் ஆகியோர் தேவை இல்லாத ஷாட் அடி ஆட்டம் இழந்தனர். ஆனால் யாருமே எதிர்பாராத வகையில் ஜடேஜா, அக்சர் பட்டேல் ஆகியோர் ஜோடி சேர்ந்து ஆஸ்திரேலிய அணியை விட இந்தியாவின் ஸ்கோரை அதிகப்படுத்தினர். தற்போது ஆஸ்திரேலியாவை விட இந்திய அணி 144 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இன்னும் இந்தியா ஒரு 50 ரன்கள் சேர்த்தால் கூட இன்னிங்ஸ் வெற்றிக்கு வாய்ப்பு இருக்கிறது.

ஆஸி. ஆடுகளங்கள்

ஆஸி. ஆடுகளங்கள்

இந்த நிலையில் கிரிக்கெட் வர்ணனையில் ஆஸ்திரேலிய வீரர்களும் இந்திய வீரர்களும் ஒன்றாக அமர்ந்து பேசி வருவதால் பல சுவாரசியமான சம்பவங்கள் நடைபெற்றது. அதில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்காட் போலந்து வீசும் போது இவர் ஆஸ்திரேலியா ஆடுகளங்களில் சிறப்பாக செயல்படுவார். வேதப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் இவர் தன்னுடைய திறமையை நிரூபித்து இருக்கிறார். ஆனால் இந்திய ஆடுதளங்களில் அவர் எப்படி செயல்படுவார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்று மேத்யூ ஹைடன் கூறினார்.

கவாஸ்கர் பதிலடி

கவாஸ்கர் பதிலடி

இதற்கு பதிலளித்த சுனில் கவாஸ்கர் வேதப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களை ஆஸ்திரேலியா அமைக்கிறது என்று நீங்களே ஒப்பு கொண்டு விட்டீர்கள். ஆனால் இந்தியாவில் பொதுவாகவே ஆடுகளம் சுழற் பந்து வீச்சுக்கு சாதகமாக தான் இருக்கும். அப்படி இருக்க நீங்கள் ஆடுகளம் குறித்து இவ்வளவு கேள்வியை எழுப்புகிறீர்கள்? ஏன் இதை சர்ச்சைக்கு உள்ளாக்குகிறீர்கள்? உங்கள் மீடியா ஏன் இப்படி செய்கிறது என்று கேள்வி கேட்டார்.

 ரவி சாஸ்த்ரி காட்டம்

ரவி சாஸ்த்ரி காட்டம்

அதற்கு பதில் அளித்த ஹைடன் எங்களுடைய ஆடுகளமும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அமைக்கப்பட்ட போது சர்ச்சைக்கு உள்ளானது என்பதை ஒப்புக்கொண்டார். மேலும் பேட்டிங் மற்றும் பந்துவீச்சுக்கு என இரண்டுக்கும் சமமான அளவில் ஆடுகளம் அமைக்க வேண்டும் என்பதே எனது விருப்பம் என்றும் ஹைடன் விளக்கம் அளித்தார். இதேபோன்று இன்று ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர்கள் பந்து வீசும் போது எப்படி பந்து திரும்புகிறது என்று பாருங்கள் என ஹைடன் கூறினார். இதற்கு பதிலடி கொடுத்த ரவி சாஸ்திரி, ஆனால் அந்தப் பந்துவீச்சாளர் எந்த ஒரு விக்கெட்டையும் எடுக்க வில்லையே. பந்து திரும்பி என்ன பயன்.

ஆஸி வீரர்கள் திருப்பம்

ஆஸி வீரர்கள் திருப்பம்

ஆடுகளம் குறித்து அவ்வளவு பேசினீர்களே? கடந்த 24 மணி நேரத்துக்கு முன்பு எவ்வளவு விமர்சனம் வைத்தீர்கள்? ஆனால் இப்போது என்ன நடக்கிறது என்று பாருங்கள். உங்கள் பந்துவீச்சாளர் கிரிக்கெட்டை எடுக்க வில்லை என்று ரவி சாஸ்திரி கூறினார். இதேபோன்று இந்திய சுழற் பந்துவீச்சாளர்களும் ஆஸ்திரேலியா சுழற் பந்துவீச்சாளர்களும் பந்தை எந்த அளவுக்கு அதிகம் திருப்புகிறார்கள் என்று தொழில்நுட்பம் மூலம் கவனிக்கப்பட்டது. இதில் இந்திய சுழற் பந்துவீச்சாளர்கள் விட ஆஸ்திரேலிய சுழற் பந்துவீச்சாளர்கள் தான் அதிக அளவில் பந்தை திருப்பியது உறுதியானது.

Story first published: Friday, February 10, 2023, 23:31 [IST]
Other articles published on Feb 10, 2023
English summary
Ravi shastri and sunil gavaskar slams australians commentators பார்த்தீங்களா பந்து எப்படி Turn ஆகுது.. ஹைடன் கேட்ட கேள்வி.. ஒரே பதிலில் ஆஃப் செய்த ரவி சாஸ்த்ரி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+