தோனி பத்தி எதையும் யோசிக்காதீங்க.. ஐபிஎல் வரைக்கும் வெயிட் பண்ணுங்க - ரவி சாஸ்திரி வேண்டுகோள்
கொல்கத்தா : மகேந்திர சிங் தோனி மீண்டும் இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் பங்கேற்று விளையாடுவாரா என்பது குறித்த பல்வேறு யூகங்கள் வெளிவந்தவண்ணம் உள்ள நிலையில், அவரது ரசிகர்கள் ஐபிஎல் வரை காத்திருக்க வேண்டும் என்று இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கேட்டுக் கொண்டுள்ளார்.
தோனி இவ்வளவு விரைவில் அணியிலிருந்து ஓய்வு பெறுவது தேவையற்ற ஒன்று என்றும், அவர் போன்ற சிறந்த வீரர் இன்னும் சிறிது காலம் விளையாட வேண்டும் என்றும் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியும் தெரிவித்திருந்தார்.
கடந்த உலகக் கோப்பை தொடரில் அரையிறுதிப் போட்டியில் தோல்வியுற்று இந்திய அணி வெளியேறியதில் இருந்து, சர்வதேச போட்டிகளில் விளையாட தோனி ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில் கடந்த வாரத்தில் அவர் மீண்டும் தன்னுடைய பயிற்சியை துவங்கியுள்ளார்.

சர்வதேச விளையாட்டுகளை தவிர்த்த தோனி
கடந்த ஜூலை மாதத்தில் நியூசிலாந்து அணி வேகப்பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சின் மூலம் இந்தியா அரையிறுதி போட்டியில் தோல்வியுற்று உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகியது. அதுமுதல் சர்வதேச போட்டிகளில் விளையாட எம்.எஸ். தோனி ஆர்வம் காட்டாமல் உள்ளார்.

இன்னும் சில காலம் விளையாட வேண்டும்
இதனிடையே புதிதாக பொறுப்பேற்றுள்ள பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, தோனி இவ்வளவு விரைவில் ஓய்வு பெறுவது சரியல்ல என்றும், அவரை போன்ற சிறப்பான வீரர், அணியில் இன்னும் சில காலம் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

கடந்த காலத்தை மாற்ற முடியாது
இதனிடையே, கடந்த காலத்தை மாற்ற முடியாது என்று தெரிவித்துள்ள இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, அடுத்த ஆண்டு டி20 உலக கோப்பை தொடர் நடைபெறவுள்ளதை சுட்டிக்காட்டி, அந்த கோப்பையை பெற முனைப்பு காட்ட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஐபிஎல் வரை காத்திருங்கள்
தோனி குறித்த யூகங்களை அவரது ரசிகர்கள் தவிர்க்க வேண்டும் என்று கோரியுள்ள ரவி சாஸ்திரி, அவர் தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் விளையடுவாரா என்று அறிந்து கொள்ள ஐபிஎல் வரை காத்திருக்கவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஐபிஎல் முடிவு செய்யும்
ஐபிஎல் தொடரில் தோனியின் விளையாட்டு அவர் தொடர்ந்து டி20 உலக கோப்பை தொடரில் 15 வீரர்களின் ஒருவராக இருப்பாரா என்பது குறித்து முடிவு செய்யும் என்றும் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

முதலில் வாழ்த்து தெரிவித்த ரவி சாஸ்திரி
தொடர்ந்து பேசிய ரவி சாஸ்திரி, பிசிசிஐ தலைவராக சவுரவ் கங்குலி அறிவிக்கப்பட்ட உடன் தான் மிகுந்த மகிழ்ச்சிக்குள்ளானதாகவும் முதலில் சென்று தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்ததாகவும் தெரிவித்துள்ளார். கங்குலி சிறந்த விளையாட்டு வீரர், கேப்டன் மற்றும் நிர்வாகி என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications