Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பும்ரா இருந்திருந்தால், கதையே வேறு மாதிரி இருந்திருக்கும்.. வெற்றி பெற இது தேவை - ரவி சாஸ்த்ரி கருத்து

மும்பை : ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி தொடங்க இன்னும் 24 மணி நேரத்திற்கு குறைவாகவே இருக்கிறது. இதில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் கோப்பைக்காக பலப் பரிட்சை நடத்துகின்றன. இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கிரிக்கெட் வல்லுநர்கள் கணித்து உள்ளனர்.

இந்த நிலையில் இந்திய அணியில் பும்ரா இல்லாதது மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தி இருப்பதாக முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் பும்ரா நமது இந்திய அணியில் இல்லை.

Ravi shastri feels if bumrah was there then indian bowling would look stronger like aussies

அவர் இருந்திருந்தால் இரண்டு அணியின் பந்துவீச்சும் பலமாக இருக்கிறது என்று நான் சொல்லுவேன். ஆனால் ஆஸ்திரேலியாவில் பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் இருக்கிறார்கள். டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றி பெற உங்களுக்கு ரன்களும் விக்கெட்டுகளும் மற்றும் தேவையில்லை. வெற்றி பெற வேண்டும் என்ற போர்குணம் மட்டுமே தேவை.

நீங்கள் களத்தில் ஆக்ரோஷமாக செயல்பட்டால் மக்கள் உங்கள் ஆட்டத்தை விரும்பி பார்ப்பார்கள். 1981 ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பவம் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. இங்கிலாந்து தொடர்ந்து மோசமாக விளையாடி வந்தார்கள். ஆனால் இயன் போத்தம் தனி ஆளாக நின்று ஆசஸ் தொடரின் போக்கையே மாற்றினார். அந்த வெற்றி டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு புதிய உத்வேகத்தை கொடுத்தது. இயன் போத்தம் பல ரசிகர்களை போட்டியை பார்க்க வைத்தார்.

Ravi shastri feels if bumrah was there then indian bowling would look stronger like aussies

மேலும் இந்தப் போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்த உங்களுக்கு உடல் தகுதி மிகவும் முக்கியம். அதற்கு தான் சொல்கிறேன் பெரிய தொடரில் விளையாடுவதற்கு முன்பு உங்களுக்கு கொஞ்சமாவது கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று இருக்க வேண்டும். களத்தில் தொடர்ந்து ஐந்து நாட்கள் ஆறு மணி நேரம் நிற்பதற்கும், இரண்டு மணி நேரம் வலை பயிற்சியில் பந்து வீசுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.

இதனால் முகமது சமி சமீபகாலமாக நிறைய கிரிக்கெட் விளையாடி இருக்கிறார். நாங்கள் விளையாடிய போது கொரோனா அச்சுறுத்தல் இருந்தது. வீரர்கள் தனிமைப்படுத்திக் கொண்டு இருந்தார்கள். 7 நாட்கள் பயிற்சி 14 நாட்கள் தனியாக இருந்தார்கள். ஆனால் தற்போது இரு அணிகளுக்கும் போட்டியில் தங்களை தயார் படுத்திக்கொள்ள நேரம் இருக்கிறது. இது நிச்சயம் நல்ல தொடராக அமையும்.

Story first published: Tuesday, June 6, 2023, 12:20 [IST]
Other articles published on Jun 6, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+