Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“கடந்த 6 ஆண்டுகளில் இதுதான் மோசம்”.. முதல் டி20ல் இந்தியாவின் சொதப்பல்.. ரவிசாஸ்திரி கடும் விளாசல்!

மொஹாலி: இந்திய அணியின் ஃபீல்டிங் குறித்து முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மிக கடுமையாக தாக்கியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுடனான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.

இந்த போட்டியில் இந்திய அணி 208 ரன்களை குவித்த போதும், அதனை கட்டுப்படுத்த முடியாமல் தோல்வியடைந்தது.

ஃபீல்டிங் சொதப்பல்

ஃபீல்டிங் சொதப்பல்

இப்போட்டியில் இந்திய அணிக்கு பல திருப்புமுனைகள் ஏற்படவிருந்தது. ஆனால் ஃபீல்டிங் சொதப்பல்கள் காரணமாக இழந்துவிட்டனர். ஆட்டத்தின் 7.3 ஓவரில் ஹர்திக் வீசிய பந்தை கேமரான் க்ரீன் தூக்கி அடித்தார். ஆனால் அந்த கேட்ச்-ஐ அக்‌ஷர் பட்டேல் தவறவிட்டார். இல்லையெனில் அவரை அரைசதம் அடிக்காமல் தடுத்திருக்கலாம்.

முக்கியமான திருப்பம்

முக்கியமான திருப்பம்

இதற்கு அடுத்த ஓவரிலேயே ஸ்டீவ் ஸ்மித் அடித்த பந்தை கே.எல்.ராகுல் தவறவிட்டு அதிர்ச்சி கொடுத்தார். இதனையெல்லாம் விட ஹர்ஷல் விட்ட ஒரு கேட்ச் ஆட்டத்தையே மாற்றி அமைத்தது. 17.2 ஓவரில் மேத்யூவ் வேட் அடித்த பந்தை ஹர்ஷல் கைக்கு வந்தும் விட்டுவிட்டார். அப்போது அவரின் ஸ்கோர் 23 ரன்கள் மட்டுமே இருந்தது. இந்த கேட்ச்- விட்டதால் அவர் 45 ரன்களை அடித்து ஆஸ்திரேலியாவுக்கு வெற்றியை தேடி தந்தார்.

ரவிசாஸ்திரி கோபம்

ரவிசாஸ்திரி கோபம்

இந்நிலையில் இதற்கு கடும் கண்டனத்தை ரவிச்சாஸ்திரி கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், கடந்த காலங்களில் இருந்த இந்திய அணியை பார்த்தால், சீனியர்கள், ஜூனியர்கள் கலந்து இருப்பார்கள். ஆனால் நேற்றைய அணி அப்படி இல்லை. இதே போல ஃபீல்டிங் படு மட்டமான ஒன்றாக மாறியுள்ளது. கடந்த 5- 6 ஆண்டுகளை எடுத்துக்கொண்டால் இந்தியாவை விட சிறந்த ஃபீல்டிங் எங்குமே இருந்தது இல்லை. பெரிய தொடர்களில் அதுதான் நமக்கு கைக்கொடுத்தது.

ஃபீல்டர்களே இல்லை

ஃபீல்டர்களே இல்லை

ஆனால் இன்று உள்ள இந்திய அணியில் ஃபீல்டிங் என்பது மிக மோசமாக உள்ளது. ஜடேஜாவும் இல்லாததால், ஒரு சிறப்பான ஃபீல்டரும் இல்லை. இதனால் ஒவ்வொரு போட்டியிலும் 15-20 ரன்கள் குறைவாக வந்துவிட்டதோ என எண்ண வைக்கின்றனர். பெரிய தொடர்களை கைப்பற்ற வேண்டும் என்றால் ஃபீல்டிங் சிறப்பாக அமைந்திருக்க வேண்டியது அவசியம் என சாஸ்திரி கூறியுள்ளார்.

Story first published: Wednesday, September 21, 2022, 15:49 [IST]
Other articles published on Sep 21, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+