Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“அடிச்சு சொல்றேன், நோட் பண்ணிக்கோங்க” இந்தியா எத்தனை போட்டிகளில் வெல்லும்.. ரவி சாஸ்திரி கணிப்பு

நாக்பூர்: ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடரில் யார் வெற்றி பெறுவார்கள்? எத்தனை புள்ளி விவரங்களுடன் வெற்றியை பெறும் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கணித்துள்ளார்.

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ள பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் யுத்தம் நாளை நாக்பூரில் உள்ள மைதானத்தில் தொடங்குகிறது. இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு போட்டி தொடங்கிவிடும் என அறிவித்துள்ளனர்.

இந்திய அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்துவது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும். பல ஜாம்பவான்களே இதற்கு முந்தைய காலங்களில் திணறியுள்ளனர். அப்படி இருக்கையில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான அணி எப்படி எதிர்கொள்ளும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

இந்திய அணி ஆதிக்கம்

இந்திய அணி ஆதிக்கம்

மறுபுறம் கடைசியாக நடைபெற்ற 3 பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர்களிலும் இந்திய அணி மட்டுமே வெற்றி கண்டுள்ளது. இதில் 2 முறை ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துள்ளது. இந்த இரண்டு முறையுமே ரவி சாஸ்திரி தான் இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருந்தார். கேப்டன் கோலியை வைத்து 2018 - 2019ம் ஆண்டில் ஒருமுறையும், ரகானேவை கேப்டனாக வைத்து 2020 - 2021 ஆண்டில் வரலாற்று வெற்றியை பதிவு செய்தார்.

ரவி சாஸ்திரியின் கணிப்பு

ரவி சாஸ்திரியின் கணிப்பு

இந்நிலையில் இந்த தொடர் தொடர் குறித்து ரவிசாஸ்திரி கணித்துள்ளார். அதில், ஆஸ்திரேலி மண்ணில் இரண்டு முறை இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருந்துள்ளேன். அதன் அடிப்படையில் கூறுகிறேன், இந்தியா 4 - 0 என இந்த முறை வெற்றி பெறும். 4 போட்டிகளின் கால சூழல்கள், அணி விவரங்களை நன்கு ஆராய்ந்து பார்த்துவிட்டு தான் சொல்கிறேன். தற்போது பயிற்சியாளராக இருந்தாலும் இதை தான் கூறியிருப்பேன்.

என்ன காரணம்

என்ன காரணம்

இந்திய மண்ணில் இந்திய அணியை தவிர வேறு எந்த அணியும் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புகளே இல்லை. இதற்கு காரணம் இந்திய ஸ்பின்னர்களை அவர்களாக தாக்குப்பிடிக்க முடியாது. அஸ்வின், ஜடேஜா, அக்‌ஷர் பட்டேல், குல்தீப் யாதவ் போன்ற அனுபவமிக்க ஸ்பின்னர்களை நிச்சயம் ஆஸ்திரேலிய வீரர்களால் நாள் முழுவதும் தாக்குபிடித்து நிற்க முடியாது. எனவே இந்திய அணிதான் இந்த முறையும் 4 -0 என்ற கணக்கில் வெற்றி பெறும் என ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

பிட்ச் சர்ச்சை

பிட்ச் சர்ச்சை

தொடர்ந்து பிட்ச்- மீதான சர்ச்சைகள் குறித்து பேசிய ரவிசாஸ்திரி, ஒவ்வொரு நாட்டின் கால சூழலுக்கு ஏற்ப தான் பிட்ச்-கள் உருவாக்கப்பட்டிருக்கும். இந்தியாவின் சூழலுக்கு ஸ்பின்னர்களுக்கு சாதகமான பிட்ச்-கள் தான் சரியாக இருக்கும். ஏன்? ஆஸ்திரேலியாவில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கான களங்கள் தான் பெரும்பாலும் உள்ளன. அதற்காக அவற்றினை தரமற்ற பிட்ச் எனக் கூறிவிடலாமா??. நாம் எப்படி தயாராகி வருகிறோம், அந்தந்த நாட்டின் கால சூழலுக்கு ஏற்ப வெற்றி பெற வேண்டும் என ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

Story first published: Wednesday, February 8, 2023, 20:17 [IST]
Other articles published on Feb 8, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+