Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோஹ்லியை விட ரவி சாஸ்திரிக்குதான் சம்பளம் அதிகமாம்... ஐசிசி வெளியிட்ட பட்டியல்!

டெல்லி: கிரிக்கெட் உலகில் மிகவும் அதிக சம்பளம் வாங்கும் நபர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடும் கோஹ்லி, டோணி, அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோரின் சம்பள விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்திய கேப்டன் கோஹ்லியை விட அதிக சம்பளம் வாங்கும் நபரின் பெயரும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Ravi Shastri has announced as the world's highest earning cricket coach

உலகில் மிகவும் அதிக சம்பளம் வாங்கும் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் பட்டியல் ஐசிசியால் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் கோஹ்லியை விட அதிக சம்பளம் வாங்கும் நபராக ரவி சாஸ்திரி அறிவிக்கப்பட்டுள்ளார்.

இவர் கோஹ்லியை விட அதிக சம்பளம் வாங்குவது மட்டும் இல்லாமல் கிரிக்கெட் உலகிலேயே பயிற்சியாளர்களில் இவருக்குத்தான் அதிக சம்பளம் வழங்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. ஒரு வருடத்திற்கு இவருக்கு 1.17 மில்லியன் டாலர் சம்பளம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்திய கேப்டன் கோஹ்லி 1 மில்லியன் டாலர் வாங்குவதாக கூறப்படுகிறது.

உலகில் மற்ற அணியில் இருக்கும் பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை விட இவருக்கு வழங்கப்படும் இந்த சம்பளமே மிகவும் அதிகபட்ச சம்பளம் ஆகும். இவரை விட மற்ற கிரிக்கெட் வீரர்கள் அதிக சம்பளம் வாங்கினாலும் , பயிற்சியாளர்களில் இவருக்குத்தான் அதிக சம்பளம் வழங்கப்படுகிறது.

ஆஸ்திரேலிய அணியின் வீரர் ஸ்டீவ் ஸ்மித் 1.47 மில்லியன் டாலரும், இங்கிலாந்து வீீரர் ஜோ ரூட் 1.27 மில்லியன் டாலரும் வாங்குவதாக கூறப்படுகிறது. ஆனாலும் கிரிக்கெட் உலகில் இந்த சம்பளம் பெரிதாக பார்க்கப்பட்டாலும், கால் பந்தாட்ட வீரர்களுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் குறைந்த சம்பளம் ஆகும். கால் பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ வருடத்திற்கு 58 மில்லியன் டாலர் சம்பளம் வாங்குவது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, October 19, 2017, 13:29 [IST]
Other articles published on Oct 19, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+