மும்பை : உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்திய வீரர் ரோகித் சர்மா 65 பந்துகளில் சதம் அடித்ததற்கு ரவி சாஸ்திரி வெகுவாக பாராட்டி இருக்கிறார்.
இது குறித்து பேசிய ரவி சாஸ்திரி ரோகித் சர்மா சிக்ஸர் அடிப்பதை மிகவும் எளிமையான காரியமாக மாற்றிவிட்டார் என்று தெரிவித்தார்.
ரோகித் சர்மா அடிக்கும் ஷார்ட்களை பார்க்கும் போது மிகவும் அழகாகவும் மிகவும் எளிமையாகவும் இருப்பது போல் தெரியும்.

ஆனால் அது கடினமான ஷாட். அதனை எளிமையாக விளையாடுவது தான் ரோகித் சர்மாவின் பலமே. ரோகித் ஷர்மாவின் அதிரடியை நாம் பாராட்ட வேண்டுமென்றால், அந்த வார்த்தையை வைத்து அவரை மட்டும் தான் பாராட்ட முடியும். வேறு எந்த வீரரையும் ஒப்பிட்டு எதையும் சொல்ல முடியாது.
அந்த அளவுக்கு ரோகித் சர்மா தனித்துவமான வீரராக இருக்கிறார். ரோகித் சர்மா ஒருநாள் கிரிக்கெட்டை எப்படி விளையாட வேண்டும் என்பதை நன்கு அறிந்திருக்கிறார். இதனால் தான் அவரால் மூன்று உலக கோப்பையிலே சச்சினின் அதிக சதம் சாதனையை முறியடித்திருக்க முடிகிறது.
ரோகித் சர்மா தொடர்ந்து இதே போல் விளையாடினால் நிச்சயம் இந்த உலக கோப்பை தொடரில் மேலும் மூன்று சதங்கள் அடிப்பார் என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும். ரோகித் சர்மா கேப்டன் ஆகவும் சிறந்து செயல்படக்கூடிய வீரர். ஒருநாள் கிரிக்கெட்டில் சிறந்த வீரராக ரோஹித் சர்மா தற்போது வலம் வருகிறார் என ரவி சாஸ்திரி கூறினார். ரபி சாஸ்திரி இந்த பேட்டி விராட் கோலி ரசிகர்களை கடுப்படைய செய்திருக்கிறது.

விராட் கோலியின் தயவால்தான் ரவி சாஸ்திரி பயிற்சியாளராகவே இந்திய அணிக்குள் வந்தார். மேலும் விராட் கோலி தான் மிகச்சிறந்த வீரர் என்று ரவி சாஸ்திரி பலமுறை பேட்டி அளித்திருக்கிறார். ஆனால் தற்போது ரோகித் சர்மா ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சதம் அடித்ததன் மூலம் அவர்தான் பெரிய வீரன் என்பது போல் ரவி சாஸ்திரி மாற்றி பேசி வருவது கோடி ரசிகர்கள் மத்தியில் கோபம் அடைய செய்திருக்கிறது. இதனால் பலரும் ரவி சாஸ்திரியை சமூக வலைத்தளத்தில் செய்து கேள்வி கேட்டு வருகிறார்கள்.