For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கோலி, அஸ்வின் பற்றி பேசினார்கள்.. ஆனால் போட்டியை மாற்றியதே அவர் தான். ரவி சாஸ்திரி பாராட்டு

மும்பை : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலி, அஸ்வின், புஜாரா உள்ளிட்ட வீரர்கள் குறித்து அனைவரும் பேசி வரும்போது ஒருவரை அனைவரும் மறந்து விட்டதாக ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணியை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி இருக்கிறது.

இதற்கு பந்துவீச்சில் அஸ்வின் ஜடேஜா காரணமாக இருந்தாலும் பேட்டிங்கில் ரோகித் ஷர்மா, ஜடேஜா மற்றும் அக்சர் பட்டேல் முக்கிய காரணமாக இருந்தனர்.

தீர்மானித்து விடுகிறார்

தீர்மானித்து விடுகிறார்

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, ரோகித் சர்மாவின் அதிரடி ஆட்டத்தால் தான் இந்திய அணியின் பேட்டிங் வலுவாக தெரிந்ததாக கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர் தொடக்க வீரராக இந்தியாவில் ரோகித் சர்மாவின் சாதனைகள் பிரமிக்கும் வகையில் இருக்கிறது. ஆட்டத்தின் போக்கை அவர் ஆரம்பத்தில் தீர்மானித்து விடுகிறார்.

சாதகமாக மாறும்

சாதகமாக மாறும்

இந்த தொடருக்கு முன்பு அஸ்வின் விராட் கோலி குறித்து பலரும் பேசினார்கள். புஜாரா குறித்தும் கூட ஆஸ்திரேலிய வீரர்கள் பேசினார்கள். ஆனால் ரோகித் சர்மா தொடக்க வீரராக அதிரடியாக விளையாடினால் ஆட்டம் நிச்சயம் இந்திய அணிக்கு சாதகமாக மாறிவிடும். மேலும் ரோகித் அதிக ரன்கள் குவிக்கும் போது ட்ரெஸ்ஸிங் ரூமில் உள்ள மற்ற வீரர்கள் எந்த நெருக்கடியும் இல்லாமல் இருப்பார்கள். இந்திய அணி இந்த தொடரில் வெல்ல ரோகித் சர்மாவின் ஆட்டம் மிக முக்கிய காரணமாக இருக்கும் .

சேவாக்கின் பணி

சேவாக்கின் பணி

ஏனென்றால் ரோகித் டெஸ்ட் கிரிக்கெட்டில் வேகமாக ரன் குவிக்க கூடியவர். ரோகித் சர்மா அதிரடியாக ஆடுவதன் மூலம் அனைத்து பந்துவீச்சாளர்களையும் அவர் நெருக்கடிக்கு ஆளாக்குவார். டெஸ்ட் கிரிக்கெட்டில் சேவாக் எவ்வளவு சீக்கிரம் ரன் குவிப்பாரோ அதேபோல் ரோகித் சர்மாவும் விளையாடி வருகிறார்.சேவாக் ஃபார்மில் இருக்கும் போது மற்ற பேட்ஸ்மேன்களுக்கு களத்தில் வந்து விளையாட சுலபமாக மாறிவிடும்.

பாராட்டு

பாராட்டு

ஏனென்றால் சேவாக் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே எதிரணியை நிலை குலைய வைத்து விடுவார். தற்போது ரோகித் சர்மா சேவாக்கின் பணியை தான் செய்து வருகிறார் என்று ரவி சாஸ்திரி பாராட்டினார். இந்த நிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் 17ஆம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. இங்கு 36 ஆண்டுகளாக இந்திய அணி தோல்வியை தழுவவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, February 14, 2023, 15:06 [IST]
Other articles published on Feb 14, 2023
English summary
Ravi shastri lauds Rohit sharma as he playing like virendar sehwag in tests
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+