Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐ.சி.சி. தொடர்களில் ஏன் தோற்றோம்?- ரவி சாஸ்த்ரி விளக்கம்

மும்பை: ஐ.சி.சி தொடர்களில் தோற்றதால் விராட் கோலி கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். ரவி சாஸ்த்ரி பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகினார்

ரவி சாஸ்த்ரி-விராட் கோலி ஜோடி பல வெற்றிகளை பெற்றும், அதற்கான அங்கீகாரமாக கருதப்படும் ஐ.சி.சி. கோப்பை கிடைக்கவில்லை.

இந்த நிலையில், ஐ.சி.சி. தொடர்களில் இந்தியா எதனால் தோற்றது. இந்திய டெஸ்ட் அணியை எப்படி உருவாக்கினேன் என்பது குறித்து ரவி சாஸ்த்ரி கூறியதாவது,

மீண்டும் பொறுப்பு

மீண்டும் பொறுப்பு

2017 ஆம் ஆண்டு பெரும் சர்ச்சைக்கு பிறகு மீண்டும் இந்திய அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்றேன். அப்போது தென்னாப்பிரிக்க தொடரில் சாதிக்க வேண்டும் என்று நினைத்தேன். இதற்காக 3 மாதங்களுக்கு முன்பே பும்ராவை தொடர்பு கொண்டு டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தயாராக இருக்கும் படி கூறினேன். இந்திய அணியை பார்த்து மற்ற அணிகள் பயப்பட வேண்டும் என்றால் நாம் பலமான வேகப்பந்துவீச்சை உடைய அணியாக விளங்க வேண்டும் என்று எண்ணினேன். பும்ரா, முகமதுஷமி, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் போன்றோர் சிறப்பாக செயல்பட்டனர்.

தவறான தேர்வு

தவறான தேர்வு

இதனால் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற மண்களில் இந்தியா டெஸ்ட் போட்டிகளில் வென்றது. ஆனால் நான் பயிற்சியாளராக இருந்து 3 ஐ.சி.சி. தொடர்களில் இந்தியா தோற்றது என்பது எனக்கு ஏமாற்றம் தான். 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் தேர்வுக்குழுவினர் தேவையே இல்லாமல் 3 விக்கெட் கீப்பர்களை தேர்வு செய்தனர். அம்பத்தி ராயுடு அல்லது ஸ்ரேயாஸ் ஐயர் அணியில் சேர்க்காதது தவறு தான். ஆனால் நான் ஒரு பயிற்சியாளராக இருந்து இவர் தான் வேண்டும் என்று கேட்க முடியாது.

ஏமாற்றம்

ஏமாற்றம்

டி-20 உலகக் கோப்பையில் இந்திய அணி தோற்றுவிடும் என்று நான் எதிர்பார்த்தது தான், ஏனென்றால் நாம் அவ்வளவு பலமான அணியாக இல்லை. இதனால் அது எனக்கு மன வருத்தத்தை தரவில்லை. ஆனால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தோற்போம் என்று நான் நினைக்கவே இல்லை. 2 ஆண்டுகளாக பல போட்டியில் வென்றோம். நல்ல பந்துவீச்சாளர்களை வைத்து இருந்தோம். முதல் விக்கெட்டுக்கு 60 ரன்கள் எடுத்தோம். அத்தனையும் செய்து தோற்போம் என நினைக்கவில்லை.

Recommended Video

Ravi Shastri-க்கும் Dravid-க்கும் இடையே உள்ள வித்தியாசம் இதுதான்.. Gambhir சொன்ன தகவல்
நீக்கம் ஏன்?

நீக்கம் ஏன்?

புஜாரா, ரஹானே ஆகியோரை சில முக்கிய டெஸ்டில் உட்கார வைத்தது தவறு ஏதும் இல்லை. 2017 தென்னாப்பிரிக்க தொடரின் போது ரோகித் நல்ல பார்மில் இருந்ததால் ரஹானேவை உட்கார வைத்தேன். இங்கிலாந்து தொடரின் போது புஜாரா நல்ல பார்மில் இல்லை. அதனை அவரிடம் எடுத்து கூறினேன். அவரும் அதனை புரிந்து கொண்டார்.நான் என்ன சாதித்தேன் என்று நீங்கள் நினைத்தால் ஒரு ஆஸ்திரேலியா, இங்கிலாந்து நாட்டுக்காரரிடம் கேளுங்கள். கடைசி 3 ஆண்டுகளில் எந்த அணி சிறப்பாக விளையாடியது என்று, அவர்கள் இந்தியா என்று தான் சொல்வார்கள்.

Story first published: Friday, December 10, 2021, 17:42 [IST]
Other articles published on Dec 10, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+