Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நீங்க ரூல்ஸ வேணா மாத்தலாம்.. ஆனா.. புதிய டெஸ்ட் தரவரிசை பட்டியல்.. ஐசிசி மீது ரவி சாஸ்திரி சாடல்!

மும்பை: ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்தியா முதலிடத்தை தக்கவைத்துள்ள நிலையில், பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஐசிசி-ஐ மறைமுகமாக சாடியுள்ளார்.

2021ம் ஆண்டுகான சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை ஐசிசி நேற்று வெளியிட்டது. இதில் இந்திய அணி தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.

கடந்தாண்டு கொரோனா காரணமாக கிரிக்கெட் தொடர்கள் பெரியளவில் நடைபெறாத போதும் இந்திய அணி முதலிடத்தை தக்கவைத்துள்ளது.

இந்தியா முதலிடம்

இந்தியா முதலிடம்

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 24 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2,914 புள்ளிகளுடன் தரவரிசை பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் மோதவுள்ள நியூசிலாந்து அணி 18 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2,166 புள்ளிகளை 2ம் இடத்தில் உள்ளது.

வெற்றிகள்

வெற்றிகள்

இந்திய அணியின் முக்கிய வெற்றிகளாக கடந்த ஆண்டில் ஆஸ்திரேலியா-வுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கிலும், இங்கிலாந்துக்கு எதிரான தொடரை 3-1 என்ற கணக்கிலும் வென்றது பார்க்கப்படுகிறது. அதே போல நியூஸிலாந்து அணி மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான தொடரை 2-0 என கைப்பற்றியது.

சாஸ்திரி

சாஸ்திரி

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ரவி சாஸ்திரி, இந்திய அணி கடுமையான உழைப்பு மற்றும் நிலையான குறிக்கோளுடன் செயல்பட்டு மகுடம் சூடியுள்ளது. விதிமுறைகள் பாதியிலேயே மாற்றப்பட்டன. எனினும் எங்கள் வீரர்கள் அதில் இருந்து மீண்டு வந்தனர். கடினமான நேரங்களில் கடினமாக போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி பெற்றனர். அவர்களை நினைத்து பெருமைப்படுகிறேன் எனத்தெரிவித்துள்ளார்.

ஐசிசி மீது விமர்சனம்

ஐசிசி மீது விமர்சனம்

ரவிசாஸ்திரியின் ட்வீட்டிற்கு பின்னால் மறைமுக விமர்சனம் இடம்பெற்றுள்ளது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு நுழைவதற்கான விதிகளை ஐசிசி திடீரென மாற்றி அமைத்தது. புள்ளி சதவிகித முறை புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் நம்பர் 1 இடத்தில் இருந்த இந்திய அணி நேரடியாக இறுதிப்போக்குள் நுழைய முடியாமல், இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டிய கட்டாயத்திற்கு சென்றது. எனினும் இந்திய அதையும் செய்து அசத்தியது.

Story first published: Friday, May 14, 2021, 16:06 [IST]
Other articles published on May 14, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+