மும்பை : ஐபிஎல் தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. பெரும்பாலான அணிகள் 9 போட்டிகளை விளையாடி விட்டார்கள். இன்னும் சில போட்டிகள் தான் நடைபெற இருக்கிறது.
இன்னும் இரண்டு வாரத்தில் எந்த அணி பிளே ஆப் க்கு செல்லும் என்பது தெரிந்துவிடும். இந்த நிலையில் கோப்பையை வெல்லும் என கருதப்பட்ட சிஎஸ்கே தற்போது 10 போட்டிகளில் விளையாடி 11 புள்ளிகள் உடன் மூன்றாம் இடத்தில் இருக்கிறது.

இந்த நிலையில் ஐபிஎல் கோப்பையை வெல்ல யாருக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியிருக்கிறார். அதில் தற்போது உள்ளே சூழல் மற்றும் புள்ளி பட்டியலை வைத்துப் பார்த்தால் குஜராத் அணி தான் ஐபிஎல் கோப்பையை மீண்டும் வெல்லும் என நினைக்கிறேன். ஏனென்றால் அந்த அணி வீரர்கள் தொடர்ந்து ஒரே மாதிரி விளையாடுகிறார்கள்.
மேலும் அந்த அணியிடம் சூழலுக்கு தகுந்தார் போல் மாற்றிக் கொண்டு விளையாடும் தன்மை இருக்கிறது. மேலும் குஜராத் அணியில் தொடர்ந்து ஏழு எட்டு வீரர்கள் சிறப்பாக விளையாடுகிறார்கள். அணியில் இருக்கும் வீரர்கள் ஒருவருக்கு ஒருவர் துணையாக நின்று களத்தில் விளையாடுகிறார்கள்.இதேபோன்று எனக்கு கேப்டன்களில் சஞ்சு சாம்சன் செயல்பாடு மிகவும் பிடித்திருக்கிறது.
ஒரு கேப்டனாக அவர் தற்போது முதிர்ந்திருக்கிறார். சுழற் பந்துவீச்சாளர்களை சிறப்பாக அவர் கையாளுகிறார். ஒரு நல்ல கேப்டனால் மட்டுமே மூன்று சுழற் பந்துவீச்சாளர்களை வைத்து அணியில் விளையாட முடியும். அவர்களுக்குத்தான் எப்படி மூன்று ஸ்பின்னர்களையும் பயன்படுத்துவது என்பது தெரியும். இந்த பணியை சஞ்சு சாம்சன் நன்றாகவே செய்கிறார் என ரவி சாஸ்திரி பாராட்டி உள்ளார்.