மும்பை : ஐபிஎல் கிரிக்கெட்டு தொடர் தற்போது கிளைமாக்ஸ்சை நோக்கி நெருங்கி வருகிறது. இன்னும் இரண்டு போட்டிகள் தான் உள்ளது. இந்த நிலையில் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வரும் ஏழாம் தேதி நடைபெறுகிறது.இதற்காக விராட் கோலி தலைமையில் இந்திய அணியின் சில வீரர்கள் இங்கிலாந்துக்கு புறப்பட்டு சென்றனர்.
இந்த நிலையில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு குறித்தும் பிளேயிங் லெவன் எப்படி இருக்க வேண்டும் என்பதை குறித்தும் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஐசிசி தளத்திற்கு பேட்டி கொடுத்திருக்கிறார். அதனை தற்போது பார்க்கலாம்.

கடந்த முறை இந்திய அணி இங்கிலாந்தில் சிறப்பாக செயல்பட்டது. அதற்குக் காரணம் இந்திய அணியில் பும்ரா, சமி, சர்துல் தாக்கூர்,முகமது சிராஜ் என நான்கு சிறந்த வேகப்பந்துவீச்சாளர்கள் இருந்தனர். இதில் ஒருவர் ஆல் ரவுண்டராக இருந்தார்.கடந்த முறை களம் இறங்கி அணியில் நல்ல காம்பினேஷன் இருந்தது.
இந்தியாவின் கண்ணோட்டத்தில் இருந்து நீங்கள் பார்த்தீர்கள் என்றால், ரோகித் சர்மா இங்கிலாந்து ஆடுகளத்தில் எனது ஆட்டத்தின் மூலம் போட்டியின் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பார். ஆனால் இங்கிலாந்தில் நீங்கள் எப்போதும் அதிரடியாக விளையாட வேண்டும் என்று அவசியம் இல்லை. சூழலுக்கு ஏற்ப நீங்கள் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.

இங்கிலாந்தில் உள்ள அனைத்து சூழலுக்கும் ஏற்ற வகையில் உங்களுக்கு வீரர்கள் இருக்கிறார்கள். ஆனால் உங்களுடைய பந்துவீச்சு தரம் இல்லை என்றால் உங்களால் வெற்றி பெற முடியாது. அவர்கள் முன்பு போல் வேகமாக பந்துவீசவில்லை என உங்களுக்கு சில சந்தேகம் இருந்தால் இரண்டாவது சுழற் பந்துவீச்சாளரை நீங்கள் பயன்படுத்துவது நல்லது.
லண்டன் ஓவல் மைதான ஆடுகளம் காய்ந்த நிலையில் இருந்தால் நிச்சயமாக இந்திய அணி இரண்டு சுழற்பந்துவீச்சாளர்களை வைத்து விளையாட வேண்டும். ஆனால் நமது பிளேயிங் லெவனை தீர்மானிப்பது இங்கிலாந்தின் கால சூழல் தான். தற்போது அங்கு கோடைகாலமாக இருந்தால் இரண்டு சுழல் பந்து வீச்சாளர்களை பயன்படுத்தலாம்.
ஆனால் இங்கிலாந்தில் வானிலை மாறிக்கொண்டே இருக்கும். இந்திய அணி இரண்டு சுழற் பந்து வீச்சாளர்கள், இரண்டு வேக பந்துவீச்சாளர்கள் மற்றும் ஒரு ஆல் ரவுண்டரை வைத்து விளையாட அதிக வாய்ப்பு இருக்கிறது. இதைப்போன்று ஐந்து பேட்ஸ்மண்கள், ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என ஆறு பேட்ஸ்மேன் அணியில் இருப்பார்கள் என நம்புகிறேன்.