
9ம் தேதி துவக்கம்
ஐபிஎல் 2021 தொடர் வரும் 9ம் தேதி சென்னையில் துவங்கவுள்ளது. இந்நிலையில் அடுத்த தினம் சிஎஸ்கே மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் மோதவுள்ளன. இதையொட்டி இரு அணிகளும் தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளன. வெற்றிக்கான தீவிரம் அந்த அணிகளிடம் காணப்படுகிறது.

ரிஷப் பந்த் தலைமை
கடந்த சீசனில் இறுதிப்போட்டி வரை முதல் முறையாக முன்னேறிய டெல்லி கேபிடல்ஸ் அணி, கோப்பையை தவறவிட்டது. இந்நிலையில் புதிய கேப்டன் ரிஷப் பந்த்தின் தலைமையில் அந்த அணி இந்த சீசனை எதிர்கொள்ளவுள்ளது. கடந்த சீசனிகளில் தன்னுடைய பேட்டிங்கின்மூலம் அனைவரைவும் கவர்ந்துள்ள அவர் கேப்டனாகவும் இந்த சீசனில் தன்னை நிரூபிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நெட் பயிற்சியில் அஸ்வின்
இந்நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் வலை பயிற்சிகளில் அந்த அணியின் ஸ்பின்னர் ஆர் அஸ்வின் நேந்றைய தினம் இணைந்துள்ளார். இதன் வீடியோவை அந்த அணி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அவருடைய சிரிப்பை புகழ்ந்துள்ளது. மேலும் அவர் அணியின் ப்ளுவில் இணைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

13 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின்
பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடிவந்த அஸ்வின் கடந்த சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணியில் இணைந்தார். 15 போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். மேலும் கடந்த ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து தொடர்களிலும் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ள அவர் இந்த சீசனில் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











