Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின், சேவாக் சாதனையை முறியடித்தார் ஆல்ரவுண்டர் அஸ்வின்!

போர்ட் ஆப் ஸ்பெயின்: டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா சார்பில் அதிக தொடர் நாயகன் விருதுகளை வென்றிருந்த சச்சின், சேவாக் ஆகியோரது சாதனைகளை தற்போது ஆல்ரவுண்டர் அஸ்வின் முறியடித்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக விளையாடி வரும் இந்திய அணி டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்று அசத்தியுள்ளது. இந்த தொடரில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் அசத்தினார் அஸ்வின். தனது சுழற்பந்துவீச்சால் மேற்கிந்திய அணி வீரர்களை திணறடித்த அஸ்வின், 17 விக்கெட்களை இத்தொடரில் கைப்பற்றினார்.

Ravichandran Ashwin breaks Sachin Tendulkar's record in Test cricket

அதோடுமட்டுமல்லாமல் 2 சதங்களை விளாசிய அஸ்வின் 235 ரன்களை குவித்தார். நேற்று, இந்திய-மேற்கிந்திய அணிகளிடையேயான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தொடர் மழையால் டிராவில் முடிந்தது.

இதனிடையே இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய அஸ்வின் தொடர் நாயகன் விருதை பெற்றார். அஸ்வின் பெறும் 6-வது தொடர் நாயகன் விருது இது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர் மற்றும் சேவாக் ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 5-முறை தொடர்நாயகன் விருதை வென்றிருந்த நிலையில், அஸ்வின் அவர்களது சாதனையை தற்போது முறியடித்துள்ளார்.

சச்சின் டெண்டுல்கர் 74 டெஸ்ட் தொடரில் பங்கேற்று 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதேபோல வீரேந்திர சேவாக் 39 டெஸ்ட் தொடர்களில் பங்கேற்று 104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆனால், 13 டெஸ்ட் தொடர்களில் பங்கேற்று 36 போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின், சச்சின், சேவாக் ஆகியோரின் சாதனையை முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில் அஸ்வினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், 6-வது தொடர் நாயகன் விருதை வென்றுள்ள அஸ்வினுக்கு வாழ்த்துக்கள். நான் 36 டெஸ்டில் விளையாடி 5 தொடர்நாயகன் விருதை பெற்றுள்ளேன். சச்சின் 200 டெஸ்டில் விளையாடி 5 தொடர் நாயகன் விருதை பெற்றுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ள அஸ்வின், வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சேவாக் என்று தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை அதிக தொடர்நாயகன் விருது வென்றவர்களின் பட்டியலில் இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் முதலிடத்தில் உள்ளார். அவர் 11-முறை தொடர் நாயகன் விருதை பெற்றுள்ளார். இதனையடுத்து, 2-வது இடத்தில் தென் ஆப்ரிக்க வீரர் ஜேக்ஸ் காலிஸ்(9 முறை) உள்ளார்.

3-வது இடத்தில் பாகிஸ்தான் வீரர் இம்ரான் கான், ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வார்னே, நியூசிலாந்து வீரர் ரிச்சர்டு ஹாட்லீ ஆகியோர் உள்ளனர். இவர்கள் 8-முறை தொடர்நாயகன் விருதை வென்றுள்ளனர்.

4-வது இடத்தில் பாகிஸ்தான் வீரர் வாசிம் அக்ரம், மேற்கிந்திய தீவுகள் வீரர் சந்தர்பால் ஆகியோர் உள்ளனர். இவர்கள் 7-முறை தொடர்நாயகன் விருதை தட்டிச் சென்றுள்ளனர்.

தற்போது இந்த பட்டியலில், அஸ்வின் 5-வது இடம் பிடித்துள்ளார்.

அஸ்வின், இந்த சாதனையானது நான் மெட்ராசுக்கு அளிக்கும் பரிசு. 'ஹேப்பி மெட்ராஸ் டே' என்றும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Story first published: Tuesday, August 23, 2016, 12:35 [IST]
Other articles published on Aug 23, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+