Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs BAN: 3 இடதுகை பேட்ஸ்மேன்கள்.. அஸ்வினின் சேவை நிச்சயம் தேவை.. வாய்ப்பு கொடுப்பாரா ரோகித் சர்மா

புனே: உலகக்கோப்பை தொடரின் 17வது லீக் போட்டியில் வங்கதேச அணியை எதிர்த்து இந்திய அணி களமிறங்கவுள்ளது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த வாரத்தில் சிறிய அணிகளாக கருதப்பட்ட ஆஃப்கானிஸ்தான், நெதர்லாந்து அணிகள் விஸ்வரூபம் எடுத்து இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளை வீழ்த்தி இருக்கின்றன. இதன் மூலம் உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிக்கு முன்னேற அனைத்து அணிகளுக்கும் சம வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாளை நடக்கவுள்ள போட்டியில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணியை எதிர்த்து வங்கதேசம் விளையாடுகிறது. வங்கதேசம் அணி இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் ஒரு வெற்றி, 2 தோல்வியுடன் உள்ளது. இதனால் வலிமையான அணிகளில் ஒன்றான இந்திய அணியை வீழ்த்த தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறது.

Ravichandran Ashwin might be selected in the India Playing XI against Bangladesh in the World Cup 2023

ஏற்கனவே 2007 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை வங்கதேசம் வீழ்த்தி இருக்கிறது. அண்மை காலங்களில் இந்திய அணிக்கு எதிராக வங்கதேச அணியின் ஆக்ரோஷமும் தீவிரமாகியுள்ளது. இதனால் இரு நாடுகளுக்கு இடையில் புதிய ரைவல்ரியும் உருவாகியுள்ளது. அதேபோல் காயத்தில் ஓய்வில் இருந்த வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசனும் அணியில் இணைந்துள்ளார்.

இதனால் வங்கதேச அணி புதிய உத்வேகத்துடன் இந்திய அணியை எதிர்க்க தயாராகி வருகிறது. வங்கதேச அணியின் டாப் 7 பேட்ஸ்மேன்களில் 3 பேர் இடதுகை பேட்ஸ்மேன்களாக உள்ளனர். அவர்களில் ஷகிப் அல் ஹசன் மற்றும் ஷாண்டோ இருவரும் களத்தில் நின்றால் ஆட்டம் மொத்தமாக மாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. ஏற்கனவே ஆசிய கோப்பை தொடரில் ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் இருவராலும் ஷகிப் அல் ஹசனை வீழ்த்த முடியவில்லை.

இதனால் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளார். அதன்படி இந்திய அணியின் பிளேயிங் லெவனில் 3 ஸ்பின்னர்களுடன் களமிறங்கும் முடிவுக்கு ரோகித் சர்மா வந்துள்ளதாக பார்க்கப்படுகிறது. அதற்கேற்றபடி ரவிச்சந்திரன் அஸ்வின் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வந்தார்.

Ravichandran Ashwin might be selected in the India Playing XI against Bangladesh in the World Cup 2023

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டிக்கு ஆஃப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் அஸ்வின் சேர்க்கப்படவில்லை. அவருக்கு பதிலாக ஷர்துல் தாக்கூர் களமிறங்கினார். இந்த நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் அஸ்வினை களமிறக்கி, ஷர்துல் தாக்கூருக்கு ஒய்வு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Story first published: Wednesday, October 18, 2023, 10:56 [IST]
Other articles published on Oct 18, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+