For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தலைவா வா.. தலைமை ஏற்க வா.. கேப்டன் அஸ்வின் என்ன சொன்னார் தெரியுமா?

ஐபிஎல் போட்டியில் அஸ்வின் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்

By Shyamsundar

Recommended Video

கேப்டன் ஆன பின் அஸ்வின் என்ன சொன்னார் தெரியுமா?- வீடியோ

சென்னை: தான் கேப்டன் ஆனது குறித்து தமிழக வீரர் அஸ்வின் டிவிட் செய்து இருக்கிறார். ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியின் கேப்டனாக அஸ்வின் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்.

இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. ஐபிஎல் ஏலத்தில் இவரை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வாங்கி இருக்கிறது.

இவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. அதேபோல அவரது டிவிட்டும் வைரல் ஆகி இருக்கிறது.

சென்னையைவிட்டு போனார்

சென்னையைவிட்டு போனார்

இவ்வளவு வருடம் சென்னை அணிக்காக இருந்தவர் தற்போது பஞ்சாப் அணிக்கு சென்றுள்ளார். இதனால் ஏற்கனவே சென்னை ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். பலரும் ஏன் எடுக்கவில்லை என்று கூட கேள்வி கேட்டு இருந்தார்கள்.

அறிவிப்பு

முன்பே அஸ்வின்தான் இனி பஞ்சாப் அணியின் கேப்டனா என்பது போல இவர் கேள்வி எழுப்பி இருந்தார்கள். தற்போது அது உறுதியாகி இருக்கிறது. இதுகுறித்து பஞ்சாப் அணி டிவிட்டரில் எங்கள் புதிய கேப்டன் என்று டிவிட் செய்து இருக்கிறது.

என்ன

இதுகுறித்து அஸ்வின் டிவிட் செய்துள்ளார். அதில் ''கிட் ஹாரிங்டன் இதை எதிர்க்க மாட்டார் என்று நினைக்கிறேன்'' என்றுள்ளார். பிரபல கிட் ஹாரிங்டன் என்ற நடிகர் கிங் என்ற வார்த்தையால் அடிக்கடி அழைக்கபடுவார். அதை வைத்து இவர் டிவிட் செய்துள்ளார்.

பல வாழ்த்து

இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இவர் ''வாழ்த்துக்கள் அஸ்வின். கெத்து. சென்னை ரசிகர்கள் உங்களை மிஸ் செய்வார்கள். ஆனாலும் சந்தோசம்தான். மீசையை முறுக்கு'' என்றுள்ளார்.

Story first published: Tuesday, February 27, 2018, 13:15 [IST]
Other articles published on Feb 27, 2018
English summary
IPL auction 2018 held in Bengaluru. Ashwin sold out to Punjab in IPL auction 2018 . He sold out for 7.60 cr. Punjab team welcomes Ashwin for their team.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X