Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வெஸ்ட் இண்டீஸ் அணினாலே போதும்.. மனுஷன் குஷி ஆயிடுறாப்ல.. அஸ்வினின் தெறிக்கும் பேட்டிங் ரெக்கார்ட்ஸ்!

ட்ரினிடாட்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 13 இன்னிங்ஸ்களில் பேட்டிங் ஆடியுள்ள இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், 4 சதங்கள் மற்றும் ஒரு அரைசதம் விளாசி இருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 12 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பல்வேறு சாதனைகளை படைத்தார். இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் பிளேயிங் லெவனில் சேர்க்காததற்கு அஸ்வின் தனது திறமை மூலம் பதிலடி கொடுத்ததாகவே ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.

Ravichandran Ashwin scored 4 Hundreds and one Fifty against West Indies in Test Cricket

முதல் போட்டியில் பந்துவீச்சில் யார் என்று நிரூபித்த ரவிச்சந்திரன் அஸ்வின், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பேட்டிங்கிலும் அசத்தியுள்ளார். ஜடேஜா ஆட்டமிழந்த பின் களமிறங்கிய ரவிச்சந்திரன் அஸ்வின், இஷான் கிஷன் மற்றும் உனாத்கட் ஆகியோருடன் இணைந்து சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தினார். இன்னும் சொல்லப்போனால் பந்துவீச்சாளர்களை எதிர்முனையில் வைத்து கொண்டு, அஸ்வின் தனது 14வது அரைசதத்தை விளாசி அசத்தியுள்ளார்.

78 பந்துகளில் 56 ரன்கள் விளாசி ரவிச்சந்திரன் அஸ்வின் கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார். அதில் 8 பவுண்டரிகளும் அடங்கும். அதுமட்டுமல்லாமல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 13 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ள அஸ்வின், இதுவரை 4 சதங்கள் மற்றும் ஒரு அரைசதத்தை விளாசி இருக்கிறார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அஸ்வின் தரமான பேட்டிங் ரெக்கார்ட்ஸ் வைத்திருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்த 4 சதங்களில் இரு சதங்கள் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் அடிக்கப்பட்டவை. ரவிச்சந்திரன் அஸ்வின் இதுவரையிலான தனது கிரிக்கெட் வாழ்க்கையில் மொத்தமாக 5 டெஸ்ட் சதங்களையும், 14 அரைசதங்களையும் விளாசி இருக்கிறார். ஏராளமான முறை தனது பேட்டிங் மூலம் இந்திய அணியை வெற்றிபெற வைத்துள்ளதோடு, மெல்போர்னில் தோல்வியை தவிர்க்கவும் காரணமாக இருந்துள்ளார். அதேபோல் ஐசிசி ஆல்ரவுண்டர் பட்டியலில் அஸ்வின் இரண்டாவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, July 22, 2023, 8:51 [IST]
Other articles published on Jul 22, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+