Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மீண்டும் வாத்தி கம்மிங் பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட அஸ்வின்... வைரலான வீடியோ

மும்பை : ஐபிஎல்லிலில் இரண்டாவது ஆண்டாக தொடர்ந்து டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார் ஸ்பின்னர் ரவிசந்திரன் அஸ்வின்.

தன்னுடைய குவாரன்டைனை முடித்துக் கொண்டு அணியில் இணைந்துள்ள அவர் தொடர்ந்து வலைபயிற்சிகள் மற்றும் பிட்னஸ் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

Ravichandran Ashwin Shakes A Leg On Vaathi Coming Song During Gym Session

இந்நிலையில், தன்னுடைய ஜிம் செஷனின் போது நடிகர் விஜய்யின் வாத்தி கம்மிங் பாடலுக்கு அஸ்வின் போட்டுள்ள குத்தாட்டம் சமூகவலைதளத்தில் வைரலாகியுள்ளது.

ஐபிஎல் 2021 தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார் ஸ்பின்னர் ரவிசந்திரன் அஸ்வின். கடந்த இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இவரின் செயல்பாடு மிகவும் சிறப்பாக இருந்த நிலையில் இந்த சீசனில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த இங்கிலாந்துக்கு எதிரான பகலிரவு போட்டிக்கு முன்னதாக ஹர்திக் மற்றும் குல்தீப் யாதவுடன் இணைந்து தான் செய்த குத்தாட்ட வீடியோவை வெளியிட்டு பட்டையை கிளப்பிய அஸ்வின், தற்போது மீண்டும் டெல்லி கேபிடல்ஸ் அணியின் ஜிம் செஷனின் இடையில் நடிகர் விஜய்யின் வாத்தி கம்மிங் பாடலுக்கு ஆடியுள்ள வீடியோவை டெல்லி கேபிடல்ஸ் அணி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

Story first published: Wednesday, April 7, 2021, 19:27 [IST]
Other articles published on Apr 7, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+